ரசிப் தைய்யிப் எர்டோகன்

ரசிப் தைய்யிப் எர்டோகன்( பிறப்பு:26 பெப்ரவரி 1954) துருக்கியின் தற்போதைய 12வது ஜனாதிபதியாவார். அவர் முன்பு துருக்கியின் பிரதமராக 2003 முதல் 2014வரையான காலப்பகுதியிலும்,இஸ்தான்பூலின் மேயராக 1994முதல் 1998வரையான காலப்பகுதியிலும் கடமையாற்றினார்.2001இல், அவர் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை உருவாக்கினார்.2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுன்னர், அவரது கட்சியை பொதுத்தேர்தல்களில் தலைமை தாங்கி வழிநடத்தி 2002,2007,2011 ஆண்டு தேர்தல்களில் அவரது கட்சியை வெற்றிபெறச் செய்தார்.இஸ்லாமிய அரசியல் பின்னணி கொண்ட அவர்,தான் பழமைவாத ஜனநாயகவாதி என கூறுகின்றார்.அவரது நிருவாகம் சமூகப் பழமைவாதம் மற்றும் பொருளாதார கொள்கையுடையதாக நோக்கப்படுகின்றது.[4]

மாண்புமி
ரசிப் தைய்யிப் எர்டோகன்
Recep Tayyip Erdoğan June 2015.jpg
துருக்கியின் 12வது ஜனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 ஆகஸ்ட் 2014
பிரதமர் அஹ்மத் தாவுதொக்லு
முன்னவர் அப்துல்லாஹ் குல்
துருக்கியின் பிதமர்
பதவியில்
14 மார்ச் 2003 – 28 ஆகஸ்ட் 2014
குடியரசுத் தலைவர் அஹ்மத் நெக்செட் சீஸர்
அப்துல்லாஹ் குல்
துணை கபினட் l (2003–07)
கபினட் ll(2007–11)
கபினட் lll(2011–14)
முன்னவர் அப்துல்லாஹ் குல்
பின்வந்தவர் அஹ்மத் தாவுதொக்லு
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி
பதவியில்
14 ஆகஸ்ட் 2001 – 27 ஆகஸ்ட் 2014
முன்னவர் பதவி உருவாக்கம்
பின்வந்தவர் அஹ்மத் தாவுதொக்லு
பதவியில்
9 மார்ச் 2003 – 28 ஆகஸ்ட் 2014
தொகுதி சேர்ட் (2003 தேர்தல்மூலம்)
இஸ்தான்புல் l (2007-2011)
இஸ்தான்புல் மேயர்கள்
பதவியில்
27 மார்ச் 1994 – 6 நவம்பர் 1998
முன்னவர் நுரேத்தீன் சூசன்
பின்வந்தவர் அலி முபித் குருண்டா
தனிநபர் தகவல்
பிறப்பு 26 பெப்ரவரி 1954 (1954-02-26) (அகவை 67)
இஸ்தான்புல், துருக்கி
அரசியல் கட்சி தேசிய இரட்சிப்பு கட்சி
(1972–81)
நலன்புரிக் கட்சி
(1983–98)
நற்பண்பு கட்சி
(1998–2001)
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி
(2001–present)
வாழ்க்கை துணைவர்(கள்) எமின் எர்டோகன்
பிள்ளைகள் அஹ்மத் பாரக்
சுமய்யே
நிஸ்முத்தின் பிலால்
எஸ்ரா
படித்த கல்வி நிறுவனங்கள் மர்மாரா பல்கைலக்கழகம்[1][2][3]
சமயம் சுன்னி இஸ்லாம்
கையொப்பம்
இணையம் Government website
Personal website

ஒரு இமாம் ஹதிப் பாடசலையில்(இரண்டாம் நிலைக்கல்வி நிலையம்) கற்ற எர்டோகன், துருக்கியின் ஒரு உதைப்பந்தாட்ட அணியில் நடுத்தர சிறப்பான வீராக விளையாடினார்.1994இல் இஸ்லாமிய நலன்புரிக் கட்சியிலிருந்து இஸ்தான்பூலின் மேயராக தெரிவுசெய்யப்படமுன்னர்,இஸ்லாமிய அரசியல் கட்சிகளில் மாணவனாக இணைந்துகொண்டார்.[2] 1998இல் மதசகிப்புத்தன்மை காரணமாக அவரது அலுவலகத்திலிருந்து தடை செய்யப்பட்டு,10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,வெளிப்படையான இஸ்லாமிய அரசியலை கைவிட்டு, மிதவாத பழமைவாத கட்சியொன்றாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை 2001இல் உருவாக்கினார்.அவரது கட்சி, 2002ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைய விட சற்றுக்குறைவான ஆசனங்களை வென்றது.எர்டோகனின் அரசியல் அலுவலகத்தடை நீக்கப்படும்வரை, கட்சியின் இணைநிறுவனர் அப்துல்லாஹ் குல் அவரது அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.சேர்ட் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடரந்து,2003 மார்ச் மாதம் எர்டோகன் துருக்கியின் பிரிதமரானார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "Erdoğan'ın diploması aslında hangi okuldan" (Turkish). oda TV (25 April 2014). பார்த்த நாள் 3 December 2014.
  2. 2.0 2.1 Cengiz Aldemir (28 April 2014). "Erdoğan’ın diploması Meclis’te" (Turkish). Sözcü. பார்த்த நாள் 3 December 2014.
  3. "Rektörlük, diplomasını yayınladı; Halaçoğlu yeni belge gösterdi" (Turkish). Zaman (25 April 2014). பார்த்த நாள் 3 December 2014.
  4. "Turkey's Davutoglu expected to be a docile Prime Minister with Erdogan calling the shots". Associated Press. Fox News. 21 August 2014. http://www.foxnews.com/world/2014/08/21/turkey-davutoglu-expected-to-be-docile-prime-minister-with-erdogan-calling/. பார்த்த நாள்: 27 November 2014. 
  5. Arda Can Kumbaracibasi (24 July 2009). Turkish Politics and the Rise of the AKP: Dilemmas of Institutionalization and Leadership Strategy. Routledge. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-87629-9. https://books.google.com/books?id=tZLL9cg--u0C&pg=PA2.