ரசியா கான் அமீன் (Razia Khan) (1936 - 28 டிசம்பர் 2011) ஒரு வங்காளதேச எழுத்தாளரும், கவிஞரும், கல்வியாளரும் , பத்திரிகையாளரும், நாடக நடிகரும், செய்தித்தாள்களுக்கான கட்டுரையாளரும் ஆவார். கல்விக்கான இவரது பங்களிப்பிற்காக வங்காளதேச அரசு 1997 இல் இவருக்கு எகுஷே பதக் வழங்கியது.

ரசியா கான்
தாய்மொழியில் பெயர்রাজিয়া খান
பிறப்புஅண். 1936
இறப்பு28 திசம்பர் 2011(2011-12-28) (அகவை 74–75)
டாக்கா, வங்களாதேசம்
தேசியம்வங்காள தேசம்
பிள்ளைகள்ஆஷா மெஹ்ரீன் அமின் (மகள்)
உறவினர்கள்நுருல் அமின் (மாமனார்)
விருதுகள்full list

கல்வி மற்றும் தொழில் தொகு

ரசியா கானின் தந்தை மௌல்வி தமிசுதீன் கான் ஒரு அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.[1][2]

இவர், டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். [3] உயர் படிப்புக்காக பிரித்தானிய கவுன்சிலின் உதவித்தொகையில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[4]

இவர், அப்போதைய பாகிஸ்தான் அப்சர்வரின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். பின்னர் அந்தக் குழு, "தி பங்களாதேஷ் அப்சர்வர்" என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு, இவர், டாக்கா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் ஆசிரிய உறுப்பினராகச் சேர்ந்தார்.

இவர், தனது 18வது வயதில், தனது முதல் நாவலான போட் டோலர் உபன்யாஷ் [4] ஐ எழுதினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி நூருல் அமினின் இரண்டாவது மூத்த மகனான அன்வருல் அமின் மகோனை ரசியா கான் மணந்தார். அன்வருல் அமின் மகோன் பாங்க் ஆஃப் கிரெடிட் மற்றும் காமர்ஸ் இண்டர்நேஷனல், பங்களாதேஷின் முன்னாள் பொது மேலாளராக இருந்தார். இந்த பங்களாதேஷ் வங்கியின் முதல் கிளையை லண்டனில் திறந்தார்.[5] தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர்கள், வங்கியாளர் கைசர் தமிஸ் அமீன் மற்றும் பத்திரிகையாளர் ஆஷா மெஹ்ரீன் அமீன் ஆவர்.[6][7]

எழுத்துப்பணி தொகு

நாவல்கள் தொகு

  • போட் டோலர் உபன்யாஷ் (வழியின் நாவல், 1959)
  • அனுகல்பா (தி ஆல்டர்நேட்டிவ், 1959)
  • புரோட்டிசித்ரா (தி ப்ளூ-பிரிண்ட், 1975)
  • சித்ரா-கப்யா (சித்திர வசனங்கள், 1980)
  • அவர் மொஹாஜிபோன் (ஓ! நித்திய வாழ்க்கை, 1983)
  • திரௌபதி (1992) [4]
  • படடிக் (த பாதசாரி, 1996)
  • பிரஹஸ்டோனிர்
  • ஷிகோர் ஹிமாத்ரிர்
  • பாண்டி பிஹோங்கோ [4]

விருதுகள் தொகு

  • பென் (PEN) லே ரைட்டிங் விருது (1956)
  • போப் தங்கப் பதக்கம் (1957)
  • பங்களா அகாதமி இலக்கிய விருது (1975)
  • கமர் முஷ்டாரி தங்கப் பதக்கம் (1985)
  • எகுஷே பதக் (1997)
  • லேகிகா சங்க தங்கப் பதக்கம் (1998) [4]
  • த்ருஹீ கதா-ஷாஹித்யக் அப்துர் ரூஃப் சௌத்ரி நினைவு விருது (1999)
  • அனன்யா இலக்கிய விருது (2003)

சான்றுகள் தொகு

  1. "Those who passed on…" (in en). The Daily Star. 2012-01-01. http://www.thedailystar.net/news-detail-216442. 
  2. "Maulvi Tamizuddin Khan: A Celebration Of Courage" (in en). Bangladesh on Record. 2022-02-08. https://bangladeshonrecord.com/maulvi-tamizuddin-khan-a-celebration-of-courage/#.Y2xqHnZBy1s. 
  3. Shamim Ahsan (31 October 2003). "An Unpretentious Writer". The Daily Star. http://archive.thedailystar.net/magazine/2003/10/05/literature.htm. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Shamim Ahsan. "An Unpretentious Writer". Shamim Ahsan (31 October 2003). "An Unpretentious Writer". The Daily Star. Retrieved 22 July 2017.
  5. Syeda, Maisha (18 December 2021). "Anwarul Amin’s memoir revisits the first Bangladeshi bank established abroad". The Daily Star (Bangladesh). https://www.thedailystar.net/daily-star-books/news/anwarul-amins-memoir-revisits-the-first-bangladeshi-bank-established-abroad-2920311. 
  6. Mazumder, Ershad (2011), "ব্যাঙ্কারদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা", রাস্তা থেকে বলছি (in Bengali) {{citation}}: Missing or empty |url= (help)
  7. "সাহিত্যিক রাজিয়া খানের জন্মদিন আজ". NewsG24. 16 February 2022. https://www.newsg24.com/feature-news/8078/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசியா_கான்&oldid=3925619" இலிருந்து மீள்விக்கப்பட்டது