ரஜினி பெத்துராஜா

ரஜினி பெத்துராஜா தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பயகிராபிகல் சென்டர்கள் வழங்கிய சாதனைப் பெண்கள் விருது[சான்று தேவை], ராஜம், தமிழ்நேயம் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு எனப் பல சிறப்புக்களைப் பெற்றவர்.

எழுதிய நூல்கள்

தொகு
 1. உலகம் எங்கள் குடும்பம்
 2. எட்டாவது அதிசயம்
 3. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
 4. அந்நிய மண்ணில் இந்திய ஞானி (ஸ்ரீ சிவாய சுப்ரமுனிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
 5. குழந்தைகளுக்குக் குமாரசாமிராஜா
 6. பிரசாதப் பூக்கள் (கட்டுரைத் தொகுப்பு)
 7. கணாக்கண்டேன் தோழி (சிறுகதைத் தொகுப்பு)
 8. யாரோ இல்லை எவரும் (கவிதைத் தொகுப்பு)
 9. மயிலிறகாய் மாறலாம் (ஆன்மீகக் கட்டுரைத் தொகுப்பு)

விருது மற்றும் பட்டங்கள்

தொகு
 1. உலகம் எங்கள் குடும்பம் பயண நாவலுக்காக தமிழக அரசின் பரிசு[சான்று தேவை]
 2. குழந்தை இலக்கியத்துக்கான அழ.வள்ளியப்பா விருது
 3. புதுவை எழுத்தாளர் சங்கம் அளித்த "சிறுவர் இலக்கியச் செல்வி" பட்டம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜினி_பெத்துராஜா&oldid=3226468" இலிருந்து மீள்விக்கப்பட்டது