ரத்னகரந்த சிராவகாசாரம்
ரத்னகரந்த சிராவகாசாரம் | |
---|---|
சம்பத் ராய் செயின் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரத்னகரந்த சிராவகாசாரம் (1917) | |
தகவல்கள் | |
சமயம் | சமணம் |
நூலாசிரியர் | ஆச்சாரிய சமந்தபத்திரர் |
மொழி | சமக்கிருதம் |
காலம் | பொ.ஊ. 2ம் நூற்றாண்டு |
ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமணத்தின் உட்பிரிவான திகம்பரப் பிரிவைச் சேர்ந்த ஆச்சாரியரான சமந்தபத்திரரரால் (பொ.ஊ. 2ம் நூற்றாண்டு) தொகுக்கப்பட்ட சமண நூலாகும். சமந்தபத்திரர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார். ரத்னகரந்த சிராவகாசாரம், காலத்தால் மிக முற்பட்டதும், நன்கறியப்பட்டதுமான சிராவகாசார நூலாகும்.
சிராவகாசாரம், சிராவகர் எனப்படும் சமண இல்லறத்தோர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விவரிக்கும் நூலாகும். ஈராலால் சாசுதிரி, பொ.ஊ. 2ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையான 29 இவ்வகை நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.[1]
மேலோட்டம்
தொகுரத்னகரந்த சிராவகாசாரத்தின் முதல் வரி, 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:[2]
- நமா சிறீ வர்த்தமானே நிர்துதகலிலாத்மனே
- சாலொகாநாம திரிலோகாநாம யாதா-வித்யா தர்ப்பணாயதே! (1-1)
மொழிபெ.- கர்ம அழுக்குகளின் மாசுகள் [அனைத்தையும்] தனது உயிரிலிருந்து கழுவியகற்றிய [மேலும்], மூன்று உலகங்களையும் முடிவில்லாத வெளியையும் ஒரு கண்ணாடியைப் போல் ஒளிரச் செய்த சிறீ வர்த்தமான மகாவீரரைப் பணிகிறேன்!
அத்தியாயங்கள்
தொகுரத்னகரந்த சிராவகாசாரம் பின்வரும் ஏழு அத்தியாயங்கள் அல்லது பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
- நன்னம்பிக்கை
- நல்லறிவின் இயல்புகள்
- அனுவிரதம்
- குண விரதங்கள்
- சிக்சா விரதங்கள்
- சல்லேகனை
- பதினொரு பிரதிமைகள்
மொழிபெயர்ப்புக்கள்
தொகுரத்னகரந்த சிராவகாசாரம் ஆங்கில மொழியில், சம்பத் ராய் செயின் என்பவரால் 1917ல் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. இம் மொழிபெயர்ப்புக்கு, இல்லறத்தோரின் நெறி எனப் பொருள்படும் வகையில் "த அவுசுகோல்டர்சு தர்ம" எனப் பெயரிடப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Shravakachara Samgraha, Part 4, Pages Ka-Kha, Hiralal Shastri, Jivaraj Jain Granthmala, 1998
- ↑ Champat Rai Jain 1917, ப. 1.
மேற்கோள்கள்
தொகு- Jain, Champat Rai (1917), The Ratna Karanda Sravakachara, The Central Jaina Publishing House
- P. S. Jaini, Reviewed work(s): Jaina Yoga: A Survey of the Mediaeval Śrāvakācāras by R. Williams, Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol. 27, No. 3 (1964)
- Jaina yoga: a survey of the mediaeval śrāvakācāras, Volume 1 of Lala Sunder Lal Jain research series, Author R. Williams, Edition 3, Publisher Motilal Banarsidass Publ., 1991
- RATNAKARANDA SRAVAKACARA (Sanskrit-Hindi) By Acarya Samantbhadra Translated into Hindi with 2 Appendices by Dr. Jaykumar Jalaj Preface by Dr. Paul Dundas Pandit Nathuram Premi Research Series Volume 3
வெளியிணைப்புக்கள்
தொகு- ஆதிமதி மாதாசியால் மொழிபெயர்க்கப்பட்ட ரத்னகரந்த சிராவகாசார நூல்
- ரத்னகரந்த சிராவகாசாரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பரணிடப்பட்டது 2018-10-09 at the வந்தவழி இயந்திரம்
- Marathi (PDF), archived from the original (PDF) on 5 மார்ச்சு 2012, பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்பிரல் 2012