ரமணி துர்வாசுலா

ரமணி சூர்யகாந்தம் துர்வாசுலா (Ramani Durvasula) ஒரு அமெரிக்க மருத்துவ உளவியலாளர், உளவியல் பேராசிரியர், ஊடக நிபுணர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர், ரெட் டேபிள் டாக், பிராவோ, லைஃப்டைம் மூவி நெட்வொர்க், நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் ஹிஸ்டரி சேனல் மற்றும் டுடே ஷோ மற்றும் குட் மார்னிங் அமெரிக்கா போன்ற நிகழ்ச்சிகள் உட்பட நாசீசிஸ்டிக் ஆளுமை கோளாறு மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகம் பற்றி விவாதிக்கும் ஊடகங்களில் தோன்றினார்.

ரமணி துர்வாசுலா
பிறப்புரமணி சூர்யகாந்தம் துர்வாசுலா
எங்கிள்வூட், அமெரிக்கா
பணி
  • உளவியலாளர்
  • பேராசிரியர்
  • எழுத்தாளர்
  • பொது பேச்சாளர்
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்2011-தற்போது வரை
காணொளி வகை(கள்)தனிப்பட்ட வளர்ச்சி
சந்தாதாரர்கள்1.25M
(22 ஜனவரி 2023)
மொத்தப் பார்வைகள்153M
(22 ஜனவரி 2023)
இனைந்து பணியாற்றியோர்மெட்சர்க்கிள்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ரமணி சூர்யகாந்தம் துர்வாசுலா [1] நியூ ஜெர்சியில் உள்ள எங்கிள்வூட்டில் பிறந்தார்.

கல்வி தொகு

1989 இல், துர்வாசுலா கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [2] அவர் 1997 இல் லாஸ் ஏஞ்சல்ஸ்,கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டத்தையும், மேலும் மருத்துவ உளவியலில் தத்துவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார் [3]

தொழில் தொகு

இவர் சாந்தா மொனிக்காவிலும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஷெர்மன் ஓக்ஸிலும் ஒரு தனிப்பட்ட முறையில் உளவியல் பயிற்சி பெற்றுள்ளார். [4] இவர் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும், ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் உளவியல் பேராசிரியராகவும் உள்ளார். மேலும், இவர், நான் யார் என்று உங்களுக்குத் தெரியாதா: நாசீசிசம், உரிமை மற்றும் ஒழுக்கக்கேடான சகாப்தத்தில் எப்படி மன உறுதியுடன் இருப்பது? [5] நான் தங்க வேண்டுமா அல்லது போக வேண்டுமா: நாசீசிஸ்ட்டுடனான உறவில் இருந்து தப்பித்தல், [6] மற்றும் நீங்கள் ஏன் சாப்பிடுகிறீர்கள்: உங்கள் உணவு அணுகுமுறையை மாற்றவும், உங்கள் வாழ்க்கையை மாற்றவும் போன்ற [7] தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார். அத்துடன் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகை கட்டுரைகள், புத்தக அத்தியாயங்கள் மற்றும் மாநாட்டு ஆவணங்கள் போன்றவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

ரமணி துர்வாசுலா முதலில் தொலைக்காட்சியில் ரிமோட் கண்ட்ரோல் எனப்படும் விளையாட்டு நிகழ்ச்சியில் தோன்றினார். இவர் ஆக்ஸிஜன் நெட்வொர்க்கில் மை ஷாப்பிங் அடிக்சன் நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளராக இருந்தார். மேலும் டுடே ஷோ மற்றும் குட் மார்னிங் அமெரிக்கா ஆகியவற்றில் வர்ணனைகளை வழங்கியுள்ளார். [8] பிராவோ, லைஃப்டைம் மூவி நெட்வொர்க், நேஷனல் ஜியோகிராஃபிக், ஹிஸ்டரி சேனல், டிஸ்கவரி சயின்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சேனல்களும் இவரைச் சிறப்பித்துள்ளன. 2010 இல், இவர் பிராவோ தொடரான "தின்டர்வென்ஷன்" இல் தோன்றினார், அங்கு இவர் பங்கேற்பாளர்கள் ஆறு பேரின் அதிகப்படியான உணவின் மூலத்தைக் கண்டறிய உதவுவதற்காக குழு சிகிச்சை அமர்வுகளை வழிநடத்தினார். [9] இவர் பாட்காஸ்ட் செக்சுவல் டிசோரியன்டேஷன் இன் இணை தொகுப்பாளராக உள்ளார். இவர் இணைய ஊடக தளங்களிலும், குறிப்பாக 'மெட்சர்க்கிள்' மற்றும் 'டோன்' நெட்வொர்க்கிலும் பேட்டி கண்டார். இவர் டெட் மாநாட்டில் பேசினார். [10] அமெரிக்க உளவியல் சங்கத்தில், இவர் 2014-2017 வரையிலான சமூகப் பொருளாதார நிலைக்கான குழுவில் இருந்தார். 2016 இல் அதன் தலைவராக பணியாற்றினார். [11] மேலும், சிறுபான்மை பெல்லோஷிப் திட்டத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அமெரிகாவின் தேசிய நல கழகம் இவரது ஆளுமைக் கோளாறுகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளித்துள்ளது; [10] எச்.ஐ.வி மற்றும் மனநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிப்பதற்காக $1.5 மில்லியன் மானியத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர். [9] 288 நோயாளிகளை உள்ளடக்கிய நான்கு ஆண்டு ஆய்வில், பங்கேற்பாளர்களில் 92 சதவிகிதத்தினர் மனத்தளர்ச்சி, பொருள் பயன்பாட்டுக் கோளாறு அல்லது மற்றொரு அச்சு-I கோளாறை (மனநல மருத்துவம்) அனுபவித்துள்ளனர். மேலும் கிட்டத்தட்ட பாதி பேர் குறைந்தது ஒரு அச்சு-II கோளாறுக்கான (மனநல மருத்துவம்) அளவுகோல்களை பூர்த்தி செய்தனர் .எ.கா. சமூக விரோத ஆளுமை கோளாறு, எல்லைக்குட்பட்ட ஆளுமை கோளாறு, அல்லது நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. [12]

பாராட்டுக்கள் தொகு

2003 இல், துர்வாசுலா அமெரிக்க பல்கலைக்கழக பெண்களின் சங்கத்தின் "வளர்ந்து வரும் அறிஞர்" விருதையும், சி.எஸ்.யு.எல்.ஏ. விலிருந்து "சிறந்த பெண்" விருதையும் பெற்றார். [13] கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் [10] 2012 இல் இவரை ஆண்டின் சிறந்த பேராசிரியராக அறிவித்தது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

துர்வாசுலா லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். இவர் ஒரு ஒற்றை தாய் என்று அறிவித்தார்.[14] இவர் சி.எஸ்.யு.எல்.ஏ. பேராசிரியரான ரிச்சர்ட் வேர்னுடன் உறவில் உள்ளார். ரமணி தனது புத்தகத்தில் வேரின் பெற்றோருக்கு நன்றியும், அவர்களின் பெயர்களில் நன்கொடையும் அளித்துள்ளார். [15]

சான்றுகள் தொகு

  1. Tesher, Ellie (March 11, 2020). "Ask Ellie: Therapy can help understand the narcissist". Times Colonist. Archived from the original on April 12, 2020. பார்க்கப்பட்ட நாள் April 12, 2020.
  2. "One Hundred And Sixth Annual Commencement". May 21, 1989. Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் November 17, 2019.
  3. Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.
  4. Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. Retrieved January 4, 2019.
  5. ""Don't You Know Who I Am?": How to Stay Sane in an Era of Narcissism, Entitlement, and Incivility". posthillpress.com. Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  6. ESME (2016-02-28). "A Review of "Should I Stay or Should I Go?"". ESME. Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  7. You Are WHY You Eat: Change Your Food Attitude, Change Your Life. https://rowman.com/isbn/9780762791682/you-are-why-you-eat-change-your-food-attitude-change-your-life. பார்த்த நாள்: May 25, 2020. 
  8. Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. Retrieved January 4, 2019.
  9. 9.0 9.1 Novotney, Amy (March 2011). "On-air interventions". Monitor on Psychology 42 (3): 54. https://www.apa.org/monitor/2011/03/interventions.aspx. பார்த்த நாள்: January 4, 2019. 
  10. 10.0 10.1 10.2 Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.Psychology Today staff. "Ramani Durvasula, Ph.D." Psychology Today. Retrieved January 4, 2019.
  11. "Committee on Socioeconomic Status Past Members". American Psychological Association. Archived from the original on December 9, 2018. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.
  12. Novotney, Amy (October 2009). "Reducing the risk". Monitor on Psychology 40 (9): 56. https://www.apa.org/monitor/2009/10/hiv-illness.aspx. பார்த்த நாள்: January 4, 2019. 
  13. "Interview with Ramani Durvasula – Therapist & Clinical Psychologist". Careers in Psychology. Archived from the original on January 4, 2019. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.
  14. Durvasula 2019.
  15. "Psychology Giving". பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணி_துர்வாசுலா&oldid=3686869" இலிருந்து மீள்விக்கப்பட்டது