ரம்யா அரிதாஸ்

ரம்யா ஹரிதாஸ் என்பவர் இந்தியவாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்தவர். இவர் அனைத்து இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியான ராதாவின் மகளும் ஆவார். இவர் குன்னமங்கல ஊராட்சி ஒன்றியத் தலைவியாக இருந்துள்ளார். 2019 ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியியட்டு, இடதுசாரி வேட்பாளரான டாக்டர் பி. கே. பிஜூவை 1,58,968 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தில்லிக்கு அனுப்பப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையையும் பெற்றார்.[1][2][3] [4][5][6][7][8][9] மேலும் இவர் கேரளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலித் பெண் உறுப்பினரும் ஆவார் .

ரம்யா அரிதாஸ்
Ramya Haridas
ஆலத்தூர் மக்களவைத் தொகுதியின்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 May 2019
முன்னவர் போ. கே. பிஜு
தொகுதி ஆலத்தூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1987
இந்தியா, கேரளம், கோழிக்கோடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர் பி. அரிதாஸ், ராதா
தொழில் அரசியல்வாதி, சமூகப் பணியாளர்
சமயம் இந்து

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_அரிதாஸ்&oldid=2741599" இருந்து மீள்விக்கப்பட்டது