ரம் (திரைப்படம்)

2017 ஆண்டைய திரைப்படம்

ரம் (Rum) என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழி திகில் திரில்லர் திரைப்படம் ஆகும். சாய் பரத் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் இருசிகேஷ், நரேன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் மியா ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தரின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் திகதி திரைப்படம் வெளியிடப்பட்டது.[1]

ரம்
இயக்கம்சாய் பரத்
தயாரிப்புடி. விஜயராகவேந்திரா
இசைஅனிருத் ரவிசந்திரன்
நடிப்புஇருசிகேஷ்
நரேன்
சஞ்சிதா செட்டி
மியா
விவேக்
ஒளிப்பதிவுவிக்னேஸ் வாசு
கலையகம்ஆல் இன் பிக்சர்ஸ்
வெளியீடு17 பெப்ரவரி 2017 (2017-02-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இருசிகேசு - சிவன்

நரேன் - தாமஸ்

சஞ்சிதா செட்டி - ரியா

மியா - துளசி

விவேக் - ராஜ்

அம்சாத் கான் - நேபாளி சுரேஷ்

அர்ஜுன் சிதம்பரம் - குரல்

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் 2015 ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சாய் பாரத் இயக்கிய ரம் என்ற படத்தில் பணிபுரிவதாகவும், அவரது உறவினர் ஹிருஷிகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்தார்.[2] இத்திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. சாய்பரத் கனடாவில் திரைப்படத்துறையில் படிப்பை முடித்த பின், திரைப்படத்தின் தயாரிப்பு தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கதையை எழுதியிருந்தார். 2014 ஆம் ஆண்டில் வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை வேடத்தில் நடித்திருந்த இருசிகேசை ரம் படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க அணுகியிருந்தார்.[3] இத் திரைப்படத்தின் முதல் தோற்ற சுவரிதழ் 2016 ஆம் ஆண்டில் சஞ்சிதா செட்டி மற்றும் மியா ஆகியோரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. நரேன், விவேக் மற்றும் அம்சாத் கான் ஆகியோர் இத்திரைப்படத்தில் துணை வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[4] இத்திரைப்படத்தின் தலைப்பான "ரம்" என்ற தலைப்பு பரவலாக மதுபான வகையொன்றுக்கு பயன்படுத்தப்பட்டாலும் "தீர்ப்பு" என்று பொருள்படும் ஒரு பண்டைய தமிழ் வார்த்தை என்று  வெளிப்படுத்தப்பட்டது.[5][6] இப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் தொடங்கி 2016 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நிறைவடைந்தது.[7] 2016 ஆம் ஆண்டு மே இல் பதப்பாயில் அடர்ந்த காடுடன் கூடிய இருப்பிடமொன்றில் முகாம் அமைக்கப்பட்டு பியோ ஃபோபிலியா என்ற பாடல் படமாக்கப்பட்டது.[8]

ஒலிப்பதிவு

தொகு

திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். படத்தின் ஒலிப்பதிவு உரிமையை சோனி மியூசிக் வாங்கியது. 2016 ஆம் ஆண்டில் நவம்பர் 2 அன்று சென்னை பார்க் ஹயாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முன்னணி நடிகர்கள் மற்றும் குழுவினரால் இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.[9] இந்த இசைத் தொகுப்பு வெளியிடப்பட முன்பு 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் "ஹோலா அமிகோ" என்ற ஒற்றை பாடல் வெளியிடப்பட்டது. சகிப்புத்தன்மையை கருப்பொருளாக கொண்ட இந்த பாடலுக்காக மலேசிய பாடகரான பாலன் காஷ்மீருடன் அனிருத் பணிபுரிந்தார். இந்த பாடல் சமூக ஊடகங்களில் பிரபலமாகியது. இரண்டாவது தனிப்பாடலான "பியோபொபிலியா" செப்டம்பர் 2016 இல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார்.[10]

வெளியீடு

தொகு

விஜய் ராகவேந்திரா தயாரித்த இப்படத்தின் தமிழக திரையரங்கு ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000 இற்கு விற்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் படத்தை தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிட்டனர். இந்த திரைப்படம்ரதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rum Teaser: Tamil Movie Rum Official Trailer | Galaxy Reporter | Latest Breaking News". Archived from the original on 2016-11-18.
  2. "It's Anirudh for Rum - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  3. "Hrishikesh in high spirits". தி இந்து. 2017-02-16 இம் மூலத்தில் இருந்து 11 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231111042122/https://www.thehindu.com/entertainment/movies/Hrishikesh-in-high-spirits/article17311683.ece. 
  4. "Updates on RUM, Darling 2 and Yaman". Behindwoods. 2016-02-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  5. "Hrishikesh, who debuted in VIP, turns hero with Rum". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231111042123/https://www.thehindu.com/features/cinema/Scare-package/article14416642.ece. 
  6. "Ready for Rum? - Chennai". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231111042124/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Ready-for-Rum/article15835356.ece. 
  7. "Magzter - World's largest digital magazine newsstand with over 12,000 magazines". www.magzter.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  8. Subhakeerthana, S. (2016-05-27). "Campfire, gana and thrill". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  9. "Hrishikesh Sanchitha Shetty Vivekh Anirudh RUM Audio launch event details - Tamil Movie News". Indiaglitz.com. 2016-11-03. Archived from the original on 28 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  10. "Simbu records his first 'official' song for Anirudh - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  11. "RUM-The heist horror thriller on February 17". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்_(திரைப்படம்)&oldid=4098711" இலிருந்து மீள்விக்கப்பட்டது