ரவுல் து டோயிட்டு
ரவுல் து டோயிட்டு (Raoul du Toit) சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். சிம்பாப்வே நாட்டில் எஞ்சியிருக்கும் பெரும் விலங்கினத்தைச் சேர்ந்த கருப்பு காண்டாமிருகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்த முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டு டோயிட்டுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1][2][3]
ரவுல் து டோயிட்டு Raoul du Toit | |
---|---|
தேசியம் | சிம்பாப்வே நாட்டவர் |
அறியப்படுவது | கருப்பு மூக்குக்கொம்பன் பாதுகாப்பு |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2011) |
பெரிய கருப்பு காண்டாமிருகங்கள் எண்ணிக்கையில் உலகின் நான்காவது இடத்திலிருக்கும் சிம்பாப்வே அதன் பாதுகாப்பு முயற்சிகளில் தொடர்ச்சியான வெற்றிகளையும் தோல்விகளையும் நிரூபித்துள்ளது. 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பேரழிவு தரும் வேட்டையைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டுகளின் சிம்பாப்வேயின் கருப்பு காண்டாமிருகங்களின் எண்னிக்கையை அதிகரிப்பதில் பாதுகாப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்பை வனவிலங்கு பாதுகாப்பு நிலையங்களாக மாற்றுவதற்கான முதன்மை இனமாக காண்டாமிருகங்கள் தெற்கு சிம்பாப்வேயில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இனப்பெருக்கம் திட்டங்கள் நிறுவப்பட்டு இனப்பெருக்கம் மேம்பட்டது.[4]
வாழ்க்கைக் குறிப்புதொகு
சிம்பாப்வேயில் பிறந்த ரவுல் டு டோயிட்டு ஒரு வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வளர்ந்தார். தனது ஓய்வு நேரத்தை இயற்கையோடு செலவிட்டார். தென்னாப்பிரிக்காவில் நீர் மின் திட்டங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி படிப்போடு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் பின்னர் கண்டம் முழுவதும் காண்டாமிருகம் மற்றும் யானைப் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச அமைப்பில் சேர்க்கப்பட்டார். இங்கிருந்து கொண்டே டோயிட்டு இந்த இனங்களின் ஆரோக்கியமான எண்னிக்கைப் பெருக்கம் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பகுதிகளில் பல்லுயிர் மற்றும் வனவிலங்கு அடிப்படையிலான வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைக் கண்டார். தனது சொந்த நாடான சிம்பாப்வேயில் கிராமப்புற வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட காண்டாமிருக பாதுகாப்புக்கான புதுமையான மாதிரிகளை ஊக்குவிக்கப் புறப்பட்டார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Gill, Victoria (11 April 2011). "Goldman Prize: Zimbabwe's rhino rescuer honoured". BBC News. http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_9451000/9451460.stm. பார்த்த நாள்: 31 May 2012.
- ↑ "2011 Goldman Environmental Prize Recipients". Goldman Environmental Prize. 4 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2011 Recipient for Africa: Raoul du Toit". Goldman Environmental Prize. 12 நவம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Raoul du Toit". Goldman Environmental Foundation (ஆங்கிலம்). 2021-05-23 அன்று பார்க்கப்பட்டது.