இராகுல கல்லூரி
(ராகுல கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராகுல கல்லூரி (Rahula College, சிங்களம்: රාහුල විද්යාලය, இராகுல வித்தியாலயம்) இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையாகும், இது துவக்கத்தில் ஒரு பௌத்த பாடசாலையாக இருந்தாலும், தற்போது இலங்கை அரசினால் நடத்தப்படும் ஒரு தேசியப் பாடசாலை ஆகும். இது தேசிய பாடசாலையாக மாற்றப்பட்ட முதல் பாடசாலைகளுள் ஒன்றாக இருந்தது. ராகுல கல்லூரியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆரம்ப பிரிவில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களும் இரண்டாம் நிலை பிரிவில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களும் கற்கின்றனர்.
இராகுல கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
மாத்தறை இலங்கை | |
தகவல் | |
வகை | அரசு ஆண்கள் பள்ளி, தனியார் பௌத்த பள்ளியாக தொடங்கப்பட்டது |
குறிக்கோள் | අත්තානං දමයන්ති පණ්ඩිතා (பாலி: “புத்திசாலி தன்னைக் கட்டுப்படுத்துகிறான்”) |
தொடக்கம் | 1923 |
தரங்கள் | 1–13 |
மாணவர்கள் | 7000 இற்கும் மேல் |
நிறம் | நீலமும் தங்கமும் |
இணைப்பு | மாத்தறை பௌத்த சங்கம் (1923) |
இணையம் | rahulacollege.lk |
கல்லூரி இல்லங்கள்
தொகுகல்லூரி இல்லங்களும் அவற்றின் நிறங்களும்:
- அசோக்கா : சிவப்பு
- கெமுனு : நீலம்
- பராக்கிரம : மஞ்சள்
- விசய : பச்சை
விளையாட்டுக்கள்
தொகு- தடகளம்
- கூடைப்பந்து
- குத்துச்சண்டை
- சதுரங்கம்
- துடுப்பாட்டம்
- ரக்பி
- காற்பந்தாட்டம்
- நீச்சல்
- கைப்பந்தாட்டம்