ராகேஷ்தர் திரிபாதி

ராகேஷ் தர் திரிபாதி (Rakesh Dhar Tripathi), பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும், மாயாவதி அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராகவும் 2007 முதல் 2012 முடிய பதவி வகித்தவர். இவர் முக்திகஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013ம் ஆண்டில் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ராகேஷ் தர் திரிபாதி மீதான சொத்துக் குவிப்பு விசாரித்து வந்தது. இந்நிலையில் 22 டிசம்பர் 2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ராகேஷ்தர் திரிபாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; ரூபாய் 10 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனிடையே இவருக்கு 22 டிசம்பர் 2023 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியது.[1][2][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்தர்_திரிபாதி&oldid=3851825" இலிருந்து மீள்விக்கப்பட்டது