ராஜமன்றி வானூர்தி நிலையம்
(ராஜமுந்திரி விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜமன்றி வானூர்தி நிலையம் அல்லது ராஜமுந்திரி விமான நிலையம் என்பது, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமன்றிக்கு அருகில் உள்ள மதுரபூடி என்ற இடத்தில் உள்ளது.[1] இந்த நிலையம் விரிவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடுதளப் பாதை 1,749 மீட்டர்களில் இருந்து 3,165 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கப்படும். இந்த திட்டத்திற்காக 857 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.[2]
விமான சேவைகள்
தொகுஇங்கிருந்து நாள்தோறும் எட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 400 பயணிகள் வந்து செல்கின்றனர். ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கிருந்து ஐதரபாத்துக்கு விமானங்களை இயக்குகின்றன.[2] இங்கிருந்து திருப்பதி, பெங்களூர், சென்னை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன.[1]