ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக் சாய் ராஜ்குமார் எழுதி இயக்கி 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படம். இத்திரைப்படத்தில் சேரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, துணை வேடங்களில் நடிகைகள் சிருஷ்டி டங்கே, சரயு மற்றும் நந்தனா வர்மா ஆகியோருடன் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் இர்பான் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வினோத் யஜமான்யா இசையமைத்து, எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] [2]

''ராஜாவுக்கு செக்''
படிமம்:Rajavukku Check.jpg
Theatrical release poster
இயக்கம்சாய் ராஜ்குமார்
தயாரிப்புசோமன் பல்லட்
தாமஸ் கொக்கட்
இசைவினோத் யஜமான்யா
நடிப்புசேரன்
இர்பான்
சிருஷ்டி டங்கே
சரயு
ஒளிப்பதிவுஎம்.எஸ். பிரபு
படத்தொகுப்புசி.எஸ்.பிரேம்
கலையகம்பல்லட் கொக்கட் பிலிம் ஹவுஸ்
விநியோகம்SDC PICTUREZ
வெளியீடுசனவரி 24, 2020 (2020-01-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்5 கோடி

நடிகர்கள்தொகு

  • ராஜா செந்தூர் பாண்டியனாக சேரன்
  • ஆதிராவாக ஸ்ருஷ்டி டாங்கே
  • கவுரியாக சரயு மோகன், ராஜா செந்தூர் பாண்டியனின் மனைவி
  • ராஜா செந்தூர் பாண்டியனின் மகளாக நந்தனா வர்மா
  • அக்ஷயாக இர்பான்

தயாரிப்புதொகு

இயக்குனர் சாய் ராஜ்குமார், மழை (2005) மற்றும் ஹலோ பிரீமிஸ்டாரா (2007) திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மறுபிரவேசம் செய்தார். இந்த திரைப்படம் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களான சோமன் பல்லட் மற்றும் தாமஸ் கொக்கட் ஆகியோரைத் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியது. மேலும் இத்திரைப்படத்திற்கு இயக்குனர் ராஜ்குமாரின் முதல் தேர்வு முக்கிய கதாபாத்திரமான புலனாய்வு அதிகாரியாக சேரன். [3] நடிகைகள் ஸ்ருஷ்டி டங்கே, சரயு மற்றும் நந்தனா வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க கையெழுத்திட்டனர். நந்தனா வர்மா சேரனின் மகளின் கதாப்பாத்திரத்தில் சித்தரித்தனர்.[4] [5]

இந்த படம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, தொழில்துறை அளவிலான வேலைநிறுத்தம் காரணமாக சிறிது காலம் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஒரு பாடலைத் தவிர்த்து முழு படப்பிடிப்பும் மே 2018 க்குள் முடிந்தது. [6] திருமணம் (2019) படத்திற்கான சேரனின் இயக்குனர் அர்ப்பணிப்பு விளைவாக படமும் தாமதமானது. [7]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவுக்கு_செக்&oldid=3052643" இருந்து மீள்விக்கப்பட்டது