ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம்
ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம் (Raja Dinkar Kelkar Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் உள்ளது.[1] இது மருத்துவர் தினகர் ஜி. கேல்கரின் (1896-1990) தொகுப்புகளை, இவரது ஒரே மகன் ராஜாவின் நினைவாகக் காட்சிப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[2] மூன்று மாடிக் கட்டிடத்தில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு சிற்பங்கள் உள்ளன. யானைத் தந்தம், வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இசைக்கருவிகள்,[3] போர் ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
நிறுவப்பட்டது | 1920 |
---|---|
அமைவிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
சேகரிப்பு அளவு | 15000 பொருட்கள் |
வலைத்தளம் | rajakelkarmuseum |
வரலாறு
தொகுஇந்த அருங்காட்சியகச் சேகரிப்பு 1920-இல் தொடங்கப்பட்டது. 1960 ஆண்டுகளில் சுமார் 15,000 பொருட்களைக் கொண்டிருந்தது. இந்த அருங்காட்சியகம் 1962-இல் நிறுவப்பட்டது. மேலும் கேல்கர் தனது சேகரிப்பை 1975-இல் மகாராட்டிர அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[4][5]
அருங்காட்சியகத்தில் இப்போது 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இவற்றில் 2,500 காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை முக்கியமாக 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் அன்றாட வாழ்க்கை மற்றும் பிற கலைப் பொருட்களிலிருந்து முக்கியமாக இந்திய அலங்காரப் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு பண்டிடத அபிஜீத் ஜோசியின் முக்கிய படைப்புகள் உட்பட அக்கால இந்தியக் கலைஞர்களின் திறமைகளைச் சித்தரிக்கிறது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோய்களின் போது, அருங்காட்சியகம் மெய் நிகர் அருங்காட்சியகமாகச் செயல்பட்டது.
சேகரிப்பு
தொகு- கதவு சட்டங்கள்
- பாத்திரங்கள்
- ஆபரணங்கள்
- இசைக்கருவிகள்
- வெவ்வேறு ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்
படங்கள்
தொகுஅருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் பின்வருவன அடங்கும்.
-
ஆயுதங்கள் மற்றும் கவசங்கள்
-
வெற்றிலை பாக்கு வெட்டிகள்
-
மசுதானி பேசுவா
-
கிருஷ்ணர் மற்றும் பணிப்பெண்கள் சுதாமாவின் குளிப்பதற்கு உதவுகிறார்கள்
-
ஒடிசாவின் சரம் பொம்மைகள்
-
கருநாடகாவின் நிழல் பொம்மைகள்
-
இடைக்கால செஸ் போர்டின் சிப்பாய்கள்
-
சிவன் தாண்டவின் மரச் சிற்பம்
-
18ஆம் ஆண்டு மரச் சிற்பம்
சந்திரசேகர் ஆகாஷே அருங்காட்சியகப் பிரிவு
தொகுசந்திரசேகர் ஆகாஷே அருங்காட்சியகப்பிரிவில் மறைந்த தொழிலதிபர் சந்திரசேகர் ஆகாஷே, அவரது மகன்களான பண்டித்ராவ் ஆகாஷே மற்றும் தியானேஷ்வர் ஆகாஷே ஆகியோரால் வழங்கப்பட்ட பண்டைய இந்திய இசைக்கருவிகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சந்திரசேகர் ஆகாசு மற்றும் அருங்காட்சியகத்தின் நிறுவனர் திங்கர் ஜி.கேல்கரின் நான்காவது உறவினர்கள் ஆகியோரின் உறவைப் போற்றும் வகையில் இப்பிரிவிற்கு சந்திரசேகர் ஆகாஷே அருங்காட்சியகப் பிரிவு எனப் பெயரிடப்பட்டது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ A focus on Raja Dinkar Kelkar Museum.
- ↑ 2.0 2.1 "Raja Dinkar Kelkar Museum". Archived from the original on 9 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 27 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Raja Dinkar Kelkar Museum". பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Raja Dinkar Kelkar Museum Pune Timings, Entry Ticket Fee, Opening & Closing Time, Holidays & Phone Number - Pune Tourism 2020". பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
- ↑ "Visit The Raja Dinkar Kelkar Museum In Pune & Marvel At A Stunning Collection Of Indian History!". http://www.whatshot.in/pune/raja-dinkar-kelkar-museum-shukrawar-peth-pune-v-156685.
வெளி இணைப்புகள்
தொகு