ராஜீவ் ரஞ்சன் சிங்

இந்திய அரசியல்வாதி

இராஜீவ் ரஞ்சன் சிங் (Rajiv Ranjan Singh) என்ற லாலன் சிங் (Lalan Singh) (பிறப்பு 24 சனவரி 1955) எனப்வர் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய அரசின் 17வது மக்களவைக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக முங்கேர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சிியன் தேசிய கட்சித் தலைவர் ஆவார். இவர் முன்னதாக அதே கட்சியின் மாநில அலகின் தலைவராகவும் இருந்தார்.

ராஜீவ் ரஞ்சன் சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
முதல் முறை முங்கேர் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019 (2019-05-23)
தொகுதிமுங்கேர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சனவரி 1955 (1955-01-24) (அகவை 69)
பாட்னா, பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்ரேனு தேவி
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்பாட்னா
As of 26 September, 2006

இவர் இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான 2014 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் பீகார் சட்டமன்ற உறுப்பினராத் தேர்வு செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் பீகாரில் பூமிகார் குடும்பத்தில் சுவாலா பிரசாத் சிங் மற்றும் கௌசல்யா தேவி ஆயியோருக்கு 1955 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். [1] இவர் பகல்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள டி. என். பி. கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். 1974 ஆம் ஆண்டில் இவர் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தார். ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களால் நடத்தப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கு பெற்றார்.[2]

சிங் ரேணு தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு.[2]


மேற்கோள்கள் தொகு

  1. "Lalan Singh elected as JD-U national president to dent into BJP votebank".
  2. 2.0 2.1 "Current Lok Sabha Members Biographical Sketch". 13 May 2006. Archived from the original on 13 May 2006. பார்க்கப்பட்ட நாள் 3 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_ரஞ்சன்_சிங்&oldid=3735047" இலிருந்து மீள்விக்கப்பட்டது