ராஜேந்திர குமாரி பாஜ்பாய்

ராஜேந்திர குமாரி பாஜ்பாய் (Rajendra Kumari Bajpai)(8 பிப்ரவரி 1925 - 17 ஜூலை 1999) ஒரு இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சரும் மற்றும் பாண்டிச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநரும் ஆவார். 1980, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சீதாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பருமாவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

இவர் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் பீகார் மாநிலத்தில், பாகல்பூர் மாவட்டத்தின் லாலுச்சாக் என்ற இடத்தில் பண்டிட் எஸ். கே. மிஸ்ராவிற்கு மகளாய் பிறந்தார். இரவிசங்கர் சுக்லாவின் பேத்தியும் மற்றும் ஷியாமா சரண் சுக்லாவின் மருமகளும் ஆவார்.[1] ராஜேந்திர குமாரி பாஜ்பாய் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.[2]இவர் 1947 ஆம் ஆண்டில் ஆசிரியராகப் பணிபுரிந்த டி.என். பாஜ்பாயை மணந்தார். இவர் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் அசோக் பாஜ்பாய் என்ற மகனும் மனிஷா திவேதி என்ற மகளும் இருந்தனர்.[2]

தொழில் தொகு

அவர் 1962 முதல் 77 வரை உத்தரபிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்; உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், முன்னாள் பிரதமரின் இந்திரா காந்தி நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்தார். [3] உத்தரப்பிரதேச அமைச்சரவையில் 1970 முதல் 1977 வரை பல்வேறு அமைச்சரவைப் பொறுப்புகளை நிர்வகித்தார்.[2] இறுதியில் அவர் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் (1970-77) பல்வேறு அமைச்சகங்களை நடத்தினார். [2] அதன்பிறகு, 1980, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சீதாபூரிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] இவர் இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த ஆட்சிக்கலத்தில், சமூக நல அமைச்சின் (1984–86) சுயாதீன பொறுப்பில் மாநில அமைச்சராகவும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மாநில அமைச்சராகவும் (1987-89) பணியாற்றினார்.[5]இவர் பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநராக 2 மே 1995 முதல் 22 ஏப்ரல் 1998 வரை நியமிக்கப்பட்டார்.[6]

சிறுநீரகம் தொடர்பான நீண்டகால நோயால் இவர் 1999 ஆம் ஆண்டு சூலை 17 அன்று அலகாபாத்தில் இறந்தார்.[7] அவர் இறக்கும் போது, ​​அவரது மகன் அசோக் பாஜ்பாய் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் இவரது மருமகள் டாக்டர் ரஞ்சனா பாஜ்பாய் உத்தரபிரதேசத்தின் மகிளா காங்கிரசின் தலைவராய் இருந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Rajendra Kumari Bajpai". S9 Biography. Archived from the original on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 "9th Lok Sabha: Members Bioprofile". Lok Sabha Official website. Archived from the original on 3 நவம்பர் 2013.
  3. "It's family first for UP parties in poll battle". India Today. 14 January 2012.
  4. 4.0 4.1 "Rajendra Kumari Bajpai is dead". Rediff News. 17 July 1999. http://www.rediff.co.in/news/1999/jul/17baj.htm. 
  5. "Worldwide Guide to Women in Leadership". guide2womenleaders. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
  6. Pondicherry Legislative Assembly
  7. "Bajpai dead". 18 July 1999 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041222201337/http://www.expressindia.com/ie/daily/19990718/ige18012.html.