ராஜ் வீர் சிங் யாதவ்
ராஜ் வீர் சிங் யாதவ் (Raj Vir Singh Yadav) என்பவர் (27 சூலை 1937-4 பிப்ரவரி 2006) என்பவர் இந்திய மருத்துவரும்[1] பத்மசிறீ விருதாளரும் ஆவார்.
ராஜ் வீர் சிங் யாதவ் | |
---|---|
பிறப்பு | பதாயூன், உத்தரப்பிரதேசம், இந்தியா | 27 சூலை 1937
இறப்பு | 4 பெப்ரவரி 2006 | (அகவை 68)
தேசியம் | இந்தியர் |
பணி | அறுவைசிகிச்சை நிபுநர் |
அறியப்படுவது | மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை |
கல்வி
தொகுயாதவ், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நௌலிஹர்நாத்பூரில் (பதாயூன் மாவட்டம்) பிறந்தார். லக்னோவின் லக்னோ பல்கலைக்கழகத்தின் மன்னர் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரியில் 1961ல் இளநிலை மருத்துவம் மற்றும் 1964-ல் முதுநிலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார். 1974ஆம் ஆண்டு பொது அறுவை சிகிச்சை தகுதியினை சர்வதேச அறுவைசிகிச்சை கல்லூரியிலிருந்தும், பொது அறுவை சிகிச்சை சகாவாகத் தகுதியினை 1977-ல் அமெரிக்க மருத்துவர்கள் கல்லூரியிலிருந்தும் பெற்றார்.
மருத்துவ சேவை
தொகுயாதவ் 1973ல் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியாவில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாகச் செய்தார்.[2] 1982-ல் பத்மசிறீ விருது பெற்ற இவரை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கௌரவித்தார். நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகிய மூன்று இந்தியக் குடியரசுத் தலைவர்களின் கவுரவ அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
பத்ம விருது
தொகுநாட்டின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மசிறீ விருது இவருக்கு 1982ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[3]
அறக்கட்டளை
தொகுராஜ் வீர் சிங் யாதவ் அறக்கட்டளையை நிறுவியதன் மூலம் யாதவ் கௌரவிக்கப்பட்டார். இந்த அமைப்பு, மருத்துவம் மற்றும் அறிவியல் கல்வி, விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியச் சமூகங்களின் சமூக-பொருளாதார உதவி, மேம்பாடு மற்றும் பொது நலன் மற்றும் அதிகாரமளித்தல் போன்ற செயல்களை ஆதரிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.medindia.net/patients/doctor_search/dr-raj-vir-singh-yadav-indian-medicine-general-practitioner-family-physician-chandigarh-chandigarh-121545-1.htm
- ↑ https://yadav360.com/first-kidney-transplantation-doctor-in-india-raj-vir-singh-yadav/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.dashboard-padmaawards.gov.in/?Name=Raj%20Vir%20Singh%20Yadav[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- RVSY அறக்கட்டளை பரணிடப்பட்டது 2018-12-13 at the வந்தவழி இயந்திரம்