ராஜ விக்கிரமா
ராஜ விக்கிரமா 1950 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கெம்பராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படத்தில் கெம்பராஜ் அர்ஸ், என். எஸ். சுப்பையா, பி. ஜெயம்மா, எம். வி. ராஜம்மா ஆகியோர் நடித்தனர். இது தமிழ், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.[2]
ராஜ விக்கிரமா | |
---|---|
இயக்கம் | கெம்பராஜ் அர்ஸ் |
தயாரிப்பு | கெம்பராஜ் அர்ஸ் கெம்பராஜ் புரொடக்சன்ஸ் |
கதை | கெம்பராஜ் அர்ஸ் |
இசை | எஸ். ராஜம் |
நடிப்பு | கெம்பராஜ் அர்ஸ் என். எஸ். சுப்பையா ஸ்டண்ட் சோமு சி. வி. வி. பந்துலு எம். வி. ராஜம்மா பண்டரிபாய் பி. ஜெயம்மா |
வெளியீடு | நவம்பர் 29, 1950[1] |
நீளம் | 16263 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்-கன்னடம் |
கதை
தொகுசனீஸ்வரனின் அதிருப்திக்கு ஆளான அரசன் கெம்பராஜ், தன்வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். திருட்டுப் பழியின் காரணமாக தன் கால்களை இழக்கிறான். ஒரு நிலையில் சனிபகவானுடன் மோத முடியாது என்ற முடிவுக்கு வந்து தன் துன்பங்களில் இருந்து விடுபட சனிபகவானை வழிபடுகிறான். சனிபகவான் அரசனின் கோரிக்கையை ஏற்றாரா அரசன் தன் வாழ்வின் மகிழ்ச்சிகளை மீண்டும் அடைந்தானா என்பதே கதை.
நடிப்பு
தொகு
|
|
தயாரிப்பு
தொகுஇப்படத்தை கெம்பராஜ் அர்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்தார். படத்தில் ராஜம்மா, பி. ஜெயம்மா, தன் மனைவியான லலிதா உள்ளிட்ட மூன்று நாயகிகளைக் கொண்டு படமாக்கினார். ஆயிரம் அடி படமாக்கப்பட்ட நிலையில் லலிதாவின் குரல் சரியில்லை என விநியோகஸ்தர்கள் கூறியதால் தன் மனைவியான லலிதாவை படத்தில் இருந்து நீக்கி, அவருக்கு பதில் பண்டரிபாயை நடிக்கவைத்தார்.[4] ஏ. ராமையா என்பவரால் கோடம்பாக்கத்தில் உருவாக்கபட்ட முதல் படப்பிடிப்புத் தளமான ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டுடியோவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது.[4]
பாடல்
தொகுஇப்படத்திற்கு சு. ராஜம் இசையமைத்தார். பாடல் வரிகளை ஏ. எம். நடராஜா கவி எழுதினார். பாடல்களை சு. ராஜம், காந்திமதி மற்றும் ஜிக்கி ஆகியோர் பாடினர். இப்படத்தில் இடம்பெற்ற "வரப்போற மாப்பிள்ளை முறுக்குவன் மீசைய" பாடல் பிரபலமானது. இந்தப் பாடலின் மெட்டானது படி பேஹ்ன் என்ற இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மெட்டு ஆகும்.[4]
எண். | பாடல் | பாடகர்/கள் | வடிகள் | நீளம் (நி.மி:நொ) |
---|---|---|---|---|
1 | "பாழும் அடுப்பை ஊதி ஊதி பக்கமெல்லாம் நோவுது" | சு. ராஜம், காந்திமதி | ஏ. எம். நடராஜா கவி | 02:59 |
2 | "நாதோ பாசனையே நரருக்கே" | சு. ராஜம் | 03:24 | |
3 | "வரப்போற மாப்பிள்ளை முறுக்குவன் மீசைய" | ஜிக்கி | 03:28 | |
4 | "கோகில கண்டதின் கானமே கேட்டு" | சு. ராஜம், Ganthimathi | 03:56 | |
5 | "ஆனந்த பரமானந்தமே" | காந்திமதி | 03:07 | |
6 | "கனவினிலே கைய் பிடித்த" | காந்திமதி | 03:07 | |
7 | "காட்டு வழி" | காந்திமதி | 02:46 | |
8 | "ஓரமாக போய்" | சு. ராஜம் | 03:09 | |
9 | "சுகிர்த நகை செய்யும்" | காந்திமதி | 02:10 | |
10 | "ஜோதியாய் தருக நீ" | சு. ராஜம் | 03:19 |
வெளியீடு
தொகுராஜ விக்கிரமா 1950 நவம்பர் 29 அன்று வெளியானது. தமிழில் இப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கன்னடத்தில் வெற்றியை ஈட்டியது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 7 September 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Raja Vikrama (1950)". தி இந்து. 16 April 2010 இம் மூலத்தில் இருந்து 7 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170107073412/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/raja-vikrama-1950/article3020803.ece.
- ↑ 3.0 3.1 Raja Vikrama (song book). Kempraj Productions. 1950.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "மனைவி நடித்த காட்சிகளை நீக்கிய ஹீரோ!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2023.