ராணிகோலா
ராணிகோலா (Ranikhola) என்பது இந்தியாவின் சிக்கிமில் உள்ள ஓர் ஆறாகும். இது மாநிலத் தலைநகர் கேங்டாக்கிற்கு அருகில் பாய்கிறது. இது டீஸ்டா ஆற்றின் துணை ஆறாகும். 1642-ல் மங்கர்சோங்கில் தனது கணவர் இறந்த பிறகு மங்கர் ராணி இந்த ஆற்றில் தற்கொலை செய்து கொண்டார். எனவே இந்த ஆறு ராணிகோலா என்று அழைக்கப்படுகிறது. ராணிகோலா இமயமலையில் உருவாகி கேங்டாக்கிற்கு கீழ்ப்பகுதியில் பாய்கிறது. இங்கு ரேட்டி ஆற்றுடன் இணைந்து ராணிபூலை நோக்கி பாய்கிறது. மீண்டும் ரோரோ சூ ஆற்றுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 10 ராணி கோலாவுக்கு இணையாக ராணிபூலிலிருந்து சிங்தாம் வரை செல்கிறது. பின்னர் சிங்காமில் இந்த ஆறு டீஸ்டா ஆற்றுடன் இணைகிறது.[1]
ராணிகோலா Ranikhola | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
நகரம் | சிங்தாம், ராணிபூல் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | இமயமலை |
⁃ அமைவு | இமயமலை, சிக்கிம், இந்தியா |
முகத்துவாரம் | டீஸ்டா ஆறு |
⁃ அமைவு | சிங்தாம், கிழக்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம், இந்தியா |
நீர்மின் திட்டம்
தொகுசிக்கிமில் செயல்படுத்தப்பட்ட முதல் நீர்மின் திட்டம் 1927-ல் கேங்டாக்கிற்கு கீழே உள்ள ராணி கோலாவில் நிறுவப்பட்ட நுண் நீர்மின் திட்டமாகும். இது 50 கிலோ வாட் மின்உற்பத்தித் திறன் கொண்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gangtok Tourism". india.com.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.