ராதா பர்னியர்
ராதா பர்னியர் (Radha Burnier) (15 நவம்பர் 1923 - 31 அக்டோபர் 2013), 1980 முதல் 2013இல் தன் இறப்பு வரை[1] சென்னை பிரம்மஞானசபையின் தலைவியாராக இருந்தவர். அடையாறு நூலகத்தில் இயக்குநராகவும் இருந்தார்.[2]
வாழ்க்கையும், கல்வியும்
தொகுஇவரது பூர்வீகம் குடந்தைக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் ஆகும். இவர் சென்னை பிரம்மஞானசபை வளாகத்தில் பிறந்தார். பிரம்ம ஞானசபையின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் அருண்டேலும், இவரது தந்தை ஸ்ரீராம் ஆகியோர் இவரது இளமைக்காலத்தில் இவருக்கு பிரம்ம ஞான உணர்வுகளை ஊட்டினர். மயிலாப்பூரில் பள்ளிக்கல்வி கற்றதுடன் காசி இந்து பல்கலைக்கழகத்தில் கற்று வடமொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிபெற்றார். கலாசேத்திரத்தில் சேர்ந்து நடனம் பயின்று, பட்டம் பெற்ற முதல் மாணவி இவராவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Radha Burnier, president of Theosophical Society, dies at 90". Times of India. Nov 1, 2013. பார்க்கப்பட்ட நாள் 1 November 2013.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்81