ராபர்ட் ஆல்ட்மன்

அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் (1925–2006)

ராபர்ட் பெர்னார்ட் ஆல்ட்மன் ( Robert Bernard Altman பிப்ரவரி 20, 1925 - நவம்பர் 20, 2006) ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருதுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார். இவர் மிகவும் இயற்கையான ஆனால் பகட்டான மற்றும் நையாண்டி அழகியலுடன் திரைப்படங்களைத் தயாரிப்பதின் மூலம் பரவலாக அறியப்பட்டார். அமெரிக்க சினிமாவில் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

2006 ஆம் ஆண்டில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல்ட்மேனின் பணிக்காக இவருக்கு கௌரவ அகாதமி விருதினை அளித்தது . ஆஸ்கட் விருதுக்கு ஏழு முறை பரிந்துரைகள் செய்யப்பட்ட போதிலும் இவர் ஆஸ்கார் விருதை வென்றதில்லை. அவரது படங்கள் மாஷ் (1970), மெக்கேப் & மிசஸ் மில்லர் (1971), மற்றும் நாஷ்வில்லி (1975) ஆகியன அமெரிக்காவின் தேசிய திரைப்பட பதிவேட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெர்லினில் கோல்டன் பியர், வெனிஸில் கோல்டன் லயன் மற்றும் கேன்ஸில் கோல்டன் பாம் ஆகியவற்றை வென்ற சில திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆல்ட்மேன் ஒருவர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

ஆல்ட்மேன் பிப்ரவரி 20, 1925 இல் கன்சாஸ் நகரில், மிசோரியில் பிறந்தார்.இவரின் தாய் நெப்ராஸ்காவைச் சேர்ந்த மேஃப்ளவர் வம்சாவளியைச் சேர்ந்த ஹெலன் ஆவார். இவரின் தந்தை ஒரு செல்வந்த காப்பீட்டு விற்பனையாளரும் தொழில் முறை அல்லாத சூதாட்டக்காரருமான பெர்னார்ட் கிளெமென்ட் ஆல்ட்மேன் ஆவார். ஆல்ட்மேன் ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ஐரிஷ் ஆகிய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2] ஆல்ட்மேன் ஒரு கத்தோலிக்கத்தினை ஆரம்பத்தில் கடை பிடித்தார்.[3] ஆனால் இளமைக் காலத்தில் அதனை தொடர்ந்து பின்பற்றவில்லை,[4] இருப்பினும் அவர் கத்தோலிக்கர் என குறிப்பிடப்பட்டார்.[5] கன்சாஸ் நகரில் உள்ள ராக்ஹர்ஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட யேசு சபை பள்ளிகளில் கல்வி பயின்றார்.[6] அவர் 1943 இல் மோசோரியின் லெக்சிங்டனில் உள்ள வென்ட்வொர்த் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார்.

1943 ஆம் ஆண்டில் தனது 18 வயதில் ஆல்ட்மேன்அமெரிக்க இராணுவ விமானப்படையில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, போர்னியோ மற்றும் டச்சு ஈஸ்ட் இண்டீஸில் 307 வது வெடிகுண்டு குழுவுடன் பி -24 லிபரேட்டரில் ஒரு குழுவில் இடம்பெற்றார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

குடும்பம்

தொகு

ஆல்ட்மேன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி லாவோன் எல்மர் ஆவார். இவர்கள் 1947 ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். 1949 ஆம் ஆண்டு வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.அவரது இரண்டாவது மனைவி லோட்டஸ் கோரெல்லி. இவர்கள் 1950 ஆம் ஆன்டில் திருமணம் செய்துகொண்டு 1955 வரை இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு மைக்கேல் மற்றும் ஸ்டீபன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். பதினான்கு வயதில், மைக்கேல் " சூசைட் இஸ் பெயின்லஸ் " என்ற பாடலை எழுதினார். இது ஆல்ட்மேனின் திரைப்படமான மாஷின் என்பதில் கருத்துப் பாடலாக இடம் பெற்றது. ஸ்டீவன் ஒரு தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆவார்.இவர் பெரும்பான்மையாக தனது தந்தையுடன் பணிபுரிந்தார். ஆல்ட்மேனின் மூன்றாவது மனைவி கேத்ரின் ரீட். 1957 ஆ ஆண்டில் திருமனம் செய்துகொண்டு 2006 ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ராபர்ட் மற்றும் மத்தேயு என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். கேத்ரினை மணந்தபோது ஆல்ட்மேன் கொன்னி ரீட்டிற்கு மாற்றாந் தந்தை ஆனார்.[8][9]

சான்றுகள்

தொகு
  1. "Robert Altman". http://archive.salon.com/people/bc/2000/08/15/altman/index.html. பார்த்த நாள்: November 22, 2006. 
  2. "Robert Altman, 81, Mercurial Director of Masterworks and Flops". November 22, 2006 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 29, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929123631/http://www.nysun.com/article/44018. பார்த்த நாள்: November 22, 2006. 
  3. "The Religious Affiliation of Robert Altman". Adherents.com. July 28, 2005. Archived from the original on பிப்ரவரி 4, 2006. பார்க்கப்பட்ட நாள் November 22, 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Interview: Robert Altman", The Guardian
  5. "Spotlight: Catholics at the Movies". Catholichistory.net. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  6. "Finally, An Attitude Adjustment: Hollywood's Establishment Now Embraces Rebel Director Altman". March 5, 2006. 
  7. "Famous B-24/PB4Y Crew Members". B-24 Best Web. 2011. பார்க்கப்பட்ட நாள் July 25, 2011.
  8. "Director Robert Altman dies at 81 – More news and other features – MSNBC.com". Today.com. November 22, 2006. பார்க்கப்பட்ட நாள் September 17, 2011.
  9. [1] பரணிடப்பட்டது திசம்பர் 21, 2006 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஆல்ட்மன்&oldid=4162023" இலிருந்து மீள்விக்கப்பட்டது