ராபர்ட் ரிப்ளி

அமெரிக்க கேலிச்சித்திர வரைஞர்

லெராய் ராபர்ட் ரிப்ளி (LeRoy Robert Ripley, 22, பிப்ரவரி, 1890-மே 27, 1949)[1] என்பவர் ஒரு அமெரிக்கராக கேலிச்சித்திர வரைஞர், தொழில்முனைவோர், தொழில்முறை அல்லாத மானுடவியலாளர் ஆவார். இவர் நியூயார்க் குளோபல் இதழில் நம்பினால் நம்புங்கள் என்ற பத்தித் தொடர் எழுதியதற்காக பெயர் பெற்றவர். இதற்காக தான் திரட்டிய தகவல்களை தொலைக்காட்சி நிகழ்ச்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் தொடராக ஒளிபரப்பானது. இதில் உலகெங்கிலும் காணப்படும் வினேதமான உண்மைகளைக் குறித்த தகவல்கள் இடம்பெற்றன.

ராபர்ட் ரிப்ளி
Robert Ripley
1940 இல் ராபர்ட் ரிப்ளி
பிறப்பு(1890-02-22)பெப்ரவரி 22, 1890
சாண்டா ரோசா, கலிபோர்னியா, அமெரிக்கா
இறப்புமே 27, 1949(1949-05-27) (அகவை 59)
நியூயார்க்கு நகரம், அமெரிக்கா
கல்லறைஆட்ஃபெலோஸ் புல்வெளி கல்லறை, சாண்டா ரோசா, கலிபோர்னியா, அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1920s–1949
அறியப்படுவதுCreator of Ripley's Believe It or Not!
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
ரிப்ளி என்டர்டெயின்மென்ட்
வாழ்க்கைத்
துணை
Beatrice Roberts
(தி. 1919; ம.மு. 1926)
ஆலிவுட்டில் உள்ள ரிப்லியின் ஒடிட்டோரியம்

ரிப்லியின் கோலிச்சித்திரங்கள் மற்றும் எழுத்தாக்கங்களில் விளையாட்டுச் சாதனைகள் முதல் அசாதாரண மற்றும் வெகுவாக ஈர்க்கக்கூடிய தளங்களைப் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் என இருந்தன. மேலும் அதில் வாசகர்களால் வழங்கப்பட்ட வழக்கத்திற்கு மாறான வடிவ காய்கறிகள் முதல் வித்தியாசமாகக் காணப்பட்ட வீட்டு விலங்குகள் வரையிலான பல்வேறு வகையான ஒளிப்படங்களைக் கொண்டவையாக இருந்தன. அவை அனைத்தும் ஒளிப்படங்களால் ஆவணப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை தனது ஓவியங்களால் சித்தரித்தார்.

வழ்கை வரலாறு

தொகு

லெராய் ராபர்ட் ரிப்ளி 1890, பிப்ரவரி 22 அன்று கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் பிறந்தார், இருப்பினும் இவரது சரியான பிறந்த தேதி சர்ச்சைக்குரியதாக உள்ளது.[1] தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு உதவுவதற்காக உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியேறினார். மேலும் தன் 16 வயதில், பல்வேறு செய்தித்தாள்களுக்கு விளையாட்டு கேலிச்சித்திர ஓவியராக பணியாற்றத் தொடங்கினார். 1913 இல், இவர் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.[2] தி நியூயார்க் குளோப் செய்தித்தாளின் கேலிச்சித்திரங்களை வரைந்தபோது, ​​இவர் தனது முதல் "நம்பினால் நம்புங்கள்!" கேலிச்சித்திரம், 19, திசம்பர், 1918 இதழில் வெளியானது. வாசகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்ப்பை பெற்றதால், கேலிச்சித்திரம் வாரந்தோறும் வெளிவரத் தொடங்கியது.[1]

1919 இல், ரிப்ளி பதினான்கு வயது திரைப்பட நடிகையான பீட்ரைஸ் ராபர்ட்சை மணந்தார். இவர் 1922 இல் தனது முதல் உலகப் பயணத்தை மேற்கொண்டார். செய்தித்தாள்களில் தனது பயணம் குறித்த தகவலை வெளியிட்டார். இவர் அசாதாரண, ஈர்க்கதக்க வெளிநாட்டின் மண்வாசனையான பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். இவர் தனது கூற்றுகளில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்பியதால், 1923 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளரும் பன்மொழியாளருமான நார்பர்ட் பேர்ல்ரோத் என்பவரை தன் முழுநேர உதவியாளராக அமர்த்திக் கொண்டார். 1926 ஆம் ஆண்டில், ரிப்லியின் கேலிச்சித்திரங்கள் தி நியூயார்க் குளோபிலிருந்து நியூயார்க் போஸ்ட்டுக்கு மாற்றப்பட்டன.[3]

1920 கள் முழுவதும், ரிப்லி தனது பணியை மேலும் விரிவுபடுத்தினார். இதனால் இவரது புகழ் பெரிதும் அதிகரித்தது. 1925 இல் அமெரிக்க கைப்பந்து விளையாட்டுக்கான வழிகாட்டியை வெளியிட்டார். 1926 இல், இவர் நியூயார்க் மாநில கைப்பந்து வாகையரானார். மேலும் குத்துச்சண்டை பற்றிய புத்தகத்தையும் எழுதினார். பல்துறை எழுத்தாளரும், ஓவியக் கலைஞராக தன்னை நிரூபித்த நிலையில், இவர் கிங் ஃபீச்சர்ஸ் சிண்டிகேட்டை வெளியீட்டகத்தை நிர்வகித்த மொகல் வில்லியம் ராண்டால்ஃப் ஹியர்ஸ்ட் என்பவரின் கவனத்தை ஈர்த்தார். ஹியர்ஸ்ட்டுடன் சேர்ந்த பிறகு 1929 ஆம் ஆண்டில் அவரால் இவரது நம்பினால் நம்புங்கள்! ,உலகளவில் 360 செய்தித்தாள்கள் மற்றும் 17 மொழிகளில் அறிமுகமானது.[4] இந்த தொடரின் வெற்றி உறுதியான நிலையில், ரிப்ளி செய்தித்தாள்களில் வெளியான தனது தொடரின் முதல் புத்தகத் தொகுப்பை வெளியிட்டார்.

1929, நவம்பர், 3 அன்று, இவர் தனது தகவல் சித்திரத்தில், "நம்பினால் நம்புங்கள், அமெரிக்காவிற்கு தேசிய கீதம் இல்லை." என்று வரைந்தார்.[5] அது ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரான்சிஸ் ஸ்காட் கீ எழுதிய "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்" என்ற பாடலே நாட்டின் தேசிய கீதமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு எவ்வித சட்ட அங்கிகாரமும் இருக்கவில்லை. ரிப்ளி சுட்டிக் காட்டிய பிறகு 1931, மார்ச் 3 அன்று அமெரிக்க சனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்" பாடலை அமெரிக்காவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளும் சட்டத்தில் கையொப்பமிட்டார்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமாகப் பொருளாதாரம் பாதிக்கபட்ட காலக்கட்டதில் கூட ரிப்ளி பெருமளவில் சம்பாதித்தார். 1930 களின் இறுதியில் ஆண்டுக்கு, $500,000 ஈட்டினார். பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிசயங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள், மொழிபெயர்பாளர்கள், செயலாளர்கள் என பெருமளவிலாக பலரைப் பணிக்கு அமர்த்தினார். மேலும் இவர் அதிசயங்களைத் தேடி தேடி உலகம் முழுவதும் பயணம் செய்தார். வானொலி மற்றும் ஹாலிவுட்டை உள்ளடக்கியதாக தனது ஊடகத்தை விரிவுபடுத்தினார். தான் சேகரித்த அதிசயப் பொருட்கள், மாதிரிகள், படங்கள் போன்வற்றைக் கட்சிப்படுத்த முக்கிய நகரங்களில் அருங்காட்சியகங்களைக் கட்டத் தொடங்கினார். ரிப்ளியின் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட உலகளாவிய பயணங்களுக்கான நிதி ஹியர்ஸ்ட் அமைப்பால் வழங்கப்பட்டது.[6] எப்போதும் அதிசயங்களைத் தேடிச் சென்று, நீருக்கடியில், வானத்திலிருந்து, தி கார்ல்ஸ்பாட் குகைகள், மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கின் அடிப்பகுதி, பாம்பு குழிகள் போன்ற பிற கவர்ச்சியான இடங்களில் இருந்து நேரடி வானொலி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார். அடுத்த ஆண்டு, இரண்டு டசன்கள் கொண்ட நம்பினால் நம்புகள் குறும்படத் தொடரின் முதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நம்பினால் நம்புங்கள் குறும்படங்கள் வரிசையில் வார்னர் பிரோஸ் மற்றும் விட்டஃபோன் மற்றும் கிங் ஃபீச்சர்ஸ் ஆகியவை இரண்டாவது தொகுப்பை வெளியிட்டன. இவர் ரூத் எட்டிங், ஜோ பென்னர், டெட் ஹுசிங், தெல்மா வைட், ரே காலின்ஸ் மற்றும் பலருடன் விட்டபோன் இசைக் குறும்படமான சீசன்ஸ் க்ரீட்டிங்ஸ் (1931) இல் தோன்றினார். 1932 இல் ஆசியாவுக்கான பயணத்திற்குப் பிறகு, இவர் 1933 இல் சிகாகோவில் தனது முதல் அருங்காட்சியகமான ஒடிடோரியத்தைத் திறந்தார். அந்த இருங்காட்சியம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில், அருங்காட்சியகங்கள் சான் டியேகோ, டாலஸ், கிளீவ்லாந்து, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரம் ஆகிய இடங்களில் செயல்பட்டன. இவரது வாழ்க்கையில் அந்தக் கட்டத்தில், ரிப்ளி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மனிதராக த நியூயார்க் டைம்ஸ் தேர்ந்தெடுத்தது. மேலும் டார்ட்மவுத் கல்லூரி இவருக்கு கௌரவ பட்டம் வழங்கியது.[7]

இரண்டாம் உலகப் போரால் இவரின் உலகப் பயணங்கள் தடைபட்டுப் போயின. எனவே ரிப்ளி தொண்டு நோக்கங்களில் கவனம் செலுத்தினார். நம்பினால் நம்புங்கள் தகவல் சித்திரத் தொடரின் 20 வது ஆண்டு நிறைவு ஆண்டான 1948 இல் நம்பினால் நம்புங்கள்! வானொலி நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் அதற்கு பதில் நம்பினால் நம்புங்கள்! தொலைக்காட்சி தொடரைத் துவங்கினார். இது ரிப்ளியின் மிகவும் துணிச்சலான செயலாகும், ஏனெனில் ஊடக வளர்ச்சியில் இந்த ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியை பார்க்க்கூடிய அமெரிக்கர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தனர். தொலைக்காட்சிக்கான இந்தத் தொடரின் 13 அத்தியாயங்களை மட்டுமே இவரால் தொகுத்து வழங்க முடிந்தது. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அதற்கு மேல் இயலாமல் போனது. 1949, மே, 27 அன்று, தன் 59 வயதில் நியூயார்க் நகரில் மாரடைப்பால் இறந்தார். இவரது உடல் இவரது சொந்த ஊரான சாண்டா ரோசாவில், சாண்டா ரோசா கிராமப்புற கல்லறைக்கு அருகில் உள்ள ஒட்ஃபெலோஸ் புல்வெளி கல்லறைத் தொட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[8]

தகவல் சித்திரங்கள்

தொகு
 
1920 இல் வெளியிடப்பட்ட"நம்பினால் நம்புங்கள்" என்பதற்கு முந்தைய ரிப்ளியின் ஆரம்ப கால தகவல் சித்திரம். பாட் மெக்டொனால்ட், அமெரிக்க ஒலிம்பியன்.

ரிப்ளியின் தகவல் சித்திரத் தொடர் உலகளவில் 80 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு அமெரிக்க அதிபரை விட அதிகமான அஞ்சல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நியூயார்க் மற்றும் புளோரிடாவில் வீடுகளைக் கொண்டுள்ள ஒரு செல்வந்தராக ஆனார். ஆனாலும் இவர் எப்போதும் தனது சொந்த நகரமான கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார்.

தொழில்முறை மெய்த்தன்மை ஆய்வாளரான நார்பர்ட் பேர்ல்ரோத் தன்னுடன் பணிபுரிந்ததால், "தான் கூறிய ஒவ்வொரு கூற்றையும் நிரூபிக்க" முடியும் என்று ரிப்ளி கூறினார். மெய்தன்மை ஆய்வாளராக 52 ஆண்டுகள் அனுபவமிக்க ஆராய்ச்சியாளரான பேர்ல்ரோத் ரிப்ளிக்கு அசாதாரண உண்மைகளைக் கண்டறிந்து சரிபார்த்து, ரிப்ளியின் மரணத்திற்குப் பிறகு, கிங் ஃபீச்சர்ஸ் சிண்டிகேட் எடிட்டர்களுக்காக நம்பினால் நம்புங்கள்! குழுவின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.பல ஆண்டுகளாக செய்தித்தாளில் வெளிவந்த தகவல் சித்திரத் தொடரை வடிவமைத்த மற்றொரு ஊழியர் லெஸ்டர் பைக் ஆவார். ரிப்ளியின் மரணத்திற்குப் பிறகு இந்தத் தொடரை வரைந்த மற்றவர்களில் டான் விம்மர், ஜோ காம்ப்பெல் (1946-1956), ஆர்ட் ஸ்லாக், கிளெம் கிரெட்டர் (1941-1949), கார்ல் டோரீஸ், பாப் கிளார்க் (1943-1944), ஸ்டான் ராண்டால், பால் ஃப்ரீம் (1938-1975), வால்டர் ஃப்ரீம் (1948-1989) ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Robert L. Ripley". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (in ஆங்கிலம்). 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  2. "Francis Scott Key | American lawyer". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 15, 2020.
  3. Thompson, Neal (2013-05-06). "Robert Ripley: The Life and True Lies of Mr. Believe-It-Or-Not". பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
  4. Silverstein, Barry. "The Unbelievable True Story of "Ripley's Believe It or Not!"". பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
  5. Robert L. Ripley. Bizarre Magazine. February 2006.
  6. Peggy Robbins, 1999.
  7. Rothstein, Edward (August 24, 2007). "O, Believers, Prepare to Be Amazed!". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2007/08/24/arts/design/24ripl.html. 
  8. "Introduction: Ripley: Believe It or Not". American Experience. பொது ஒளிபரப்புச் சேவை. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ரிப்ளி&oldid=4041751" இலிருந்து மீள்விக்கப்பட்டது