ராபர்ட் ஹூக்

ஆங்கில இயற்கை தத்துவஞானி, கட்டிடக் கலைஞர்

ராபர்ட் ஹூக் (Robert Hooke, 18 சூலை 1635 - 3 மார்ச் 1703) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளர் (இயற்கைத் தத்துவஞானி), வானியல் நிபுணர், புவியியலாளர், வானிலை ஆய்வாளர், கட்டிடக் கலைஞர் ஆவார்.[1]  – 1665 ஆம் ஆண்டில் இவர் வடிவமைத்த ஒரு கலப்பு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நுண்ணோக்கியில் உயிரினங்களை ஆய்வு செய்த முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[2] இளம் வயதிலேயே ஒரு வறிய விஞ்ஞான ஆய்வாளராக இருந்த ஹூக், தனது காலத்தின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராக ஆனார்.[3]இவரது மரணத்திற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் எழுத்தாளர்களால் அடிக்கடி அவதூறு செய்யப்பட்ட இவரது நற்பெயர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மீட்டெடுக்கப்பட்டது. இவர், "இங்கிலாந்தின் லியோனார்டோ டா வின்சி" என்று அழைக்கப்படுகிறார்.[4]

இராபர்ட் ஹூக்
Robert Hooke
பிறப்பு18 சூலை 1635
வைட்டுத் தீவு, இங்கிலாந்து
இறப்பு3 மார்ச்சு 1703(1703-03-03) (அகவை 67)
இலண்டன், இங்கிலாந்து
அடக்கத் தலம்புனித எலன் தேவாலயம், பிசொப்கேட்
துறைஇயற்பியல், உயிரியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிறைசுட் சர்ச், ஆக்சுபோர்டு
கற்கை ஆலோசகர்கள்இராபர்ட் வில்லியம் பாயில்
அறியப்படுவதுஉயிரணு கண்டுபிடிப்பு,
பெருஞ்சிவப்புப் பிரதேசம் கண்டுபிடிப்பு,
ஊக்கின் விதி
கையொப்பம்

அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.[5]

1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Singer (1976).
  2. 'Espinasse (1956).
  3. Inwood (2003).
  4. Chapman (1996).
  5. Robert Hooke, De Potentia Restitutiva, or of Spring. Explaining the Power of Springing Bodies, London, 1678.
  6. Hooke, Robert (1665). Micrographia: Or Some Physiological Descriptions of Minute Bodies Made by Magnifying Glasses, with Observations and Inquiries Thereupon. Courier Dover Publications. p. 113. ISBN 978-0486495644. Retrieved 22 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஹூக்&oldid=4160152" இலிருந்து மீள்விக்கப்பட்டது