ராமப்பிரியா
ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
- கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- 16வது மேளமாகிய சக்ரவாகம் இந்த இராகத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- இதன் முறையே கிரக பேதத்தின் வழியாக ஒரு மேளகர்த்தா இராகத்தையும் கொடுக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | சந்தேகமுனு | தியாகராஜர் | ஆதி |
கிருதி | ஸ்மராம் யகம் | முத்துசாமி தீட்சிதர் | ரூபகம் |
கிருதி | தூக்கிய பாதத்தின் | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | சாமிசதா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | எந்நாவில் சிறிதும் | பாபநாசம் சிவன் | ஆதி |
ஜன்ய இராகங்கள்
தொகுராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.