சக்ரவாகம் கருநாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்தியநாத சிவன் இந்த இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற புனைபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

இலக்கணம்

தொகு
 
சக்ரவாகம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த2 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி12 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ராமப்பிரியா (52) ஆகும்.
  • இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் சரசாங்கி (27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் தர்மவதி (59) கிடைக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

தொகு

சக்ரவாகம் இராகத்தில் அமைந்த பாடல்கள்[1]:

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
வர்ணம் " ஜலஜாக்ஷி " பட்டணம் சுப்ரமண்யய்யர் ஆதி
வர்ணம் " இங்காதய " பட்டணம் சுப்ரமண்யய்யர் ஆதி
கிருதி " எடுலப்ரோதுவோ " தியாகராஜர் திரிபுட
கிருதி " சுகுணமுலே " தியாகராஜர் ரூபகம்
கிருதி " கஜானயுதம் " முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி " ஆடியபாதா " முத்துத் தாண்டவர் மிஸ்ரசாபு
கிருதி " காணக் கண் கோடி " கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி " அபகார நிந்தை " அருணகிரிநாதர் சதுஸ்ர ஜம்பை
கிருதி " அறிவுடையோர் " கோபாலகிருஷ்ண பாரதியார் மிஸ்ர ஜம்பை
கிருதி " ஈசனே இந்த " பாபநாசம் சிவன் ரூபகம்
கிருதி " உள்ளவறிவான் ஐயன் " இலட்சுமணப்பிள்ளை ஆதி

ஜன்ய இராகங்கள்

தொகு

சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

சக்ரவாகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

தொகு
  • "நீ பாதி நான் பாதி" - கேளடி கண்மணி
  • "உள்ளத்தில் நல்ல உள்ளம்" - கர்ணன்
  • "பாடு பாடு பாரத பண்பாடு" - செங்கோட்டை
  • "விடுகதையா இந்த வாழ்க்கை" - முத்து

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரவாகம்&oldid=3525107" இலிருந்து மீள்விக்கப்பட்டது