மலயமாருதம்

மலயமாருதம் 16வது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் 4வது இராகமுமாகிய சக்ரவாகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
மலயமாருதம் இராகத்தில் வரும் சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
  • இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு
ஆரோகணம்: ச ரி13 ப த2 நி2
அவரோகணம்: ச நி22 ப க3 ரி1
  • இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), பஞ்சமம் (ப1), சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.

உருப்படிகள்[1] தொகு

வகை உருப்படி தாளம் கலைஞர்
திருப்புகழ் "இமராஜனில்" மி.ஜம்பை அருணகிரிநாதர்
கிருதி "மனஸாஎடு" ரூபகம் தியாகராஜர்
கிருதி "ஜன்மமெந்துகு" ஆதி மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யர்
கிருதி "கண்டபின்" ரூபகம் முத்துத் தாண்டவர்
கிருதி "அருள்செய்தனன்" ஆதி இராமசாமி சிவன்
கிருதி "தயை புரிய" ரூபகம் வேதநாயகம் பிள்ளை
கிருதி "நன்மைவெல்லும் இங்கே" ஆதி இலட்சுமணப்பிள்ளை
கிருதி "கற்பக மனோகரா" கண்டசாபு பாபநாசம் சிவன்
கிருதி "சிறு மலரை" ஆதி பெரியசாமித் தூரன்
கிருதி "பத்ம நாபா" ரூபகம் சுவாதித் திருநாள் ராம வர்மா

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலயமாருதம்&oldid=1307284" இலிருந்து மீள்விக்கப்பட்டது