ராமய்யன் தளவாய்

ராமய்யன் என்பவர் அன்றைய திருவிதாங்கூர் அல்லது வேணாட்டில் 1737 முதல் 1756 வரை தளவாயாக அல்லது முதன்மை அமைச்சராக பணியாற்றியவர். 1741-ல் குளச்சல் போரில் முக்கிய பங்காற்றியவர்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

 
ராமய்யன் தளவாய்

ராமய்யன் தற்போதைய தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் பிறந்தார். குடும்ப ஏழ்மை நிலை காரணமாக தனது ஆறாவது வயதில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் திருவட்டார் என்னும் இடத்திற்கு சென்று குடியேறினார்.

தளவாயாக தொகு

கி்.பி. 1736-ல் தளவாய் ஆறுமுகம்பிள்ளை மறைவுக்கு பின் தளவாயாக மன்னர் மார்த்தாண்டவர்மாவால் நியமிக்கப்பட்டார். மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் காயன்குளம், கொல்லம், ஆலப்புழா மற்றும் பல இடங்களில் நடந்த போர்களில் திருவிதாங்கூர் படை வெற்றிபெற முக்கிய பங்காற்றினார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. வி. நாகம் அய்யா - திருவிதாங்கூர் நாட்டு கையோடு பக்கம் 342-343
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமய்யன்_தளவாய்&oldid=2759154" இலிருந்து மீள்விக்கப்பட்டது