ராமு

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராமு 1966 (Ramu (1966 film)) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1]

ராமு
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
ஏ. வி. எம். புரொடக்சன்ஸ்
குமரன்
எம். சரவணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 10, 1966
ஓட்டம்.
நீளம்4272 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு

தொகு

முதலில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் ஜெய்சங்கர். ஏவிஎம் நிறுவனம் அவரிடம் கதையைக் கூறி படப்பிடிப்பிற்கு தேதிகளையும் உறுதி செய்துவிட்டது. அந்த சமயத்தில் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சில படங்கள் சரியான ஓடாததால் பெரிய படத்தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடித்தால் நல்லது என்று கருதி, நேரே ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அவர்களைச் சந்தித்து இப்படத்தில் தான் நடிப்பதற்கு விருப்பப்படுவதாக தெரிவித்து கதாநாயகனாக நடித்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பிரதீப் மாதவன் (3 நவம்பர் 2016). "தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2016.
  2. Galatta Tamil கலாட்டா தமிழ் (2024-06-07). "திமிரா பேசி FLOP ஆன HERO கடைசியில நடந்த TWIST AVM Kumaran Breaks Secret". பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமு&oldid=3998719" இலிருந்து மீள்விக்கப்பட்டது