ராம் சேவக் சர்மா

ராம் சேவக் சர்மா ( Ram Sewak Sharma 1955) என்பவர் இந்திய அரசு அதிகாரி ஆவார். இந்திய ஆட்சிப் பணி 1978 ஆம் ஆண்டு குழுவைச் சேர்ந்தவர். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். இதற்கு முன் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் செய்தி மற்றும் தகவல் துறையிலும் செயலர் பொறுப்புகளில் பணியாற்றினார்.[1]

கல்வித் தகுதிகள்

தொகு

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிற்றுரில் பிறந்தார். அந்த ஊருக்கு அண்மையில் இருந்த பள்ளிகளில் பயின்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1974இல் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். கான்பூர் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படித்து 1976இல் கணிதத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் 2000 ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பட்டம் பெற்றார்.[2]

சர்ச்சை

தொகு

ஆர்.எஸ்.சர்மா அண்மையில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, இதனைக் கொண்டு தனது தனி விவரங்களைக் கண்டுபிடியுங்கள் என வெளிப்படையாக டுவிட்டரில் அறைகூவல் விடுத்தார். வெளியான சில மணி நேரங்களில் சில குறும்பர்கள் ஆர்.எஸ்.சர்மாவின் பான்எண், பிறந்த தேதி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டனர். அவரது வங்கிக் கணக்கிலும் ஒரு ரூபாய் செலுத்தப்பட்டது. இந்தச் செய்தி பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.[3]

மேற்கோள்

தொகு
  1. PRESMIN (8 May 2014). "Executive Record Sheet Generator- Indian Administrative Service". PRESMIN (தில்லி). http://persmin.nic.in/ersheet/MultipleERS.asp?HiddenStr=01JH028700. பார்த்த நாள்: 8 May 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Jain, Akshai (1 January 2010). "Ram Sewak Sharma | A different drummer". Mint. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  3. Sharma, Aman (2018-07-29). "No data has been fetched using RS Sharma's Aadhaar number: Government". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/no-data-has-been-fetched-using-rs-sharmas-aadhaar-number-government/articleshow/65184621.cms?utm_source=WAPusers&utm_medium=whatsappshare&utm_campaign=socialsharebutton&from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சேவக்_சர்மா&oldid=3760383" இலிருந்து மீள்விக்கப்பட்டது