ராம் நாராயண்

சாரங்கி வாசிப்பவர்

ராம் நாராயண் (இந்தி: राम नारायण) (பிறப்பு 25 திசம்பர் 1927), பண்டிட் ராம் நாராயண் என அறியப்படுபவர், சாரங்கி இசைக்கருவியில் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞராவார். சாரங்கியை பக்கவாத்தியமாக கருதிவந்த இசைப்பிரியர்களிடம் அதற்கான முதன்மை நிலையை நாட்டியதில் இவரது பங்கு சிறப்பானது ஆகும். புகழ்பெற்ற தபலா இசைக்கருவி கலைஞர் பண்டிட் சதுர்லாலின் தமையனாவார்.[1][2][3]

ராம் நாராயண்
2009 கச்சேரி ஒன்றில் வாசிக்கையில்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு25 திசம்பர் 1927 (1927-12-25) (அகவை 96)
உதய்பூர், மேவார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)சாரங்கி
இசைத்துறையில்1944–நடப்பு
இணைந்த செயற்பாடுகள்அப்துல் வாகீத் கான், சதுர் லால், பிரிஜ் நாராயண்
இணையதளம்பண்டிட் ராம் நாராயண்

அவரது சீரிய இசையைப் பாராட்டுமுகமாக 2005ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது.

வாழ்க்கை

தொகு

இராசத்தான் மாநில உதய்பூர் நகரில் இசைக் குடும்பத்தில் பண்டிட் நாதுஜி பியாவத்திற்கு மகனாகப் பிறந்தார்.அவரது தந்தையார் தில்ரூபா இசைக்கருவி வாசிப்பதில் சிறந்து விளங்கினார். தமது ஏழாம் அகவையிலிருந்து உஸ்தாத் மெகபூப் கான்,பண்டிட் உதய்லால்,பண்டிட் மாதவ பிரசாத் மற்றும் உஸ்தாத் அப்துல் வாகீத் கான் ஆகியோரிடம் சாரங்கி இசைக்க பயின்றார்.

வெளி இணைப்புகள்

தொகு
  1. பண்டிட் ராம் நாராயண்

மேற்கோள்கள்

தொகு
  1. Narayan, Harsh (5 April 2023). "Today even at the age ..." Instagram. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
  2. Shanker, Vijay (11 August 2012). "Pandit Ram Narayan: 100 colours of sarangi". Narthaki. Archived from the original on 4 December 2012. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
  3. Neuhoff 2006, pp. 911–912
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_நாராயண்&oldid=4102562" இலிருந்து மீள்விக்கப்பட்டது