ராம் நிவாஸ் கோயல்

இராம் நிவாஸ் கோயல் (Ram Niwas Goel) 2015 ஆம் ஆண்டு முதல் தில்லி சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தில்லி சட்டமன்றத்திற்கு சாதரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது டெல்லி ஆறாவது சட்ட மன்ற சபாநாயகர் ஆவார்.[1][2]

இராம் நிவாஸ் கோயல்
சட்டமன்ற உறுப்பினர், புது தில்லியின் ஆறாம் சட்டமன்றம்
முன்னையவர்ஜித்தேந்தர் சிங் சண்டி
தொகுதிசாதரா சட்டமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர், புது தில்லியின் முதல் சட்டமன்றம்
முன்னையவர்நரேந்தர் நாத்
தொகுதிசாதரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 3, 1948 (1948-07-03) (அகவை 76)
சஃபிடோ மண்டி, அரியானா
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி. மிதிலேஷ் கோயல் (மனைவி)
பிள்ளைகள்2 மகன்கள் & 1 மகள்
பெற்றோர்சட்டர்பஜ் கோயல் (தந்தை)
சந்த்ரபதி கோயல் (தாய்)
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிஅன்சுராஜ் கல்லுாரி, தில்லி பல்கலைக்கழகம்
தொழில்வணிகர் & அரசியல்வாதி
உடைமைத்திரட்டுபேரவைத் தலைவர், புதுதில்லியின் ஆறாம் சட்டமன்றம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இராம் நிவாஸ் கோயல் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அரியானாவிலுள்ள சஃபிடோன் மண்டி என்ற ஊரில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தார். கோயல் 8 உடன்பிறப்புகளில் மூத்தவர் (5 சகோதரர்கள் & 3 சகோதரிகள்) ஆவார். 1964 ஆம் ஆண்டில், இவர்களது குடும்பம் தில்லிக்கு மாற்றப்பட்டது. ஹரியானா மற்றும் தில்லி ஆகிய இடங்களில் அவர் இடைநிலைக்கல்வி கற்றார். பின்னர் வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தை ஹான்ஸ் ராஜ் கல்லூரியில் சேர்ந்தார். அவர் நலிந்த பிரிவினருக்கான கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூகச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

23-02-2015 அன்று இராம் நிவாஸ் கோயல் டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி ஆறாவது சட்டசபைத் தேர்தலில் எம்.எல்.ஏ. பதவி வகித்தார், அவரது இரண்டாவது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக உள்ளார். அவர் டெல்லி சட்டசபை தேர்தலில் 11,731 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஜிதேந்தர் சிங் ஷண்மையை தோற்கடித்தார். 1993 ல், முதல் தில்லி சட்டசபை தேர்தலுக்காக அவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: Feb 2015. 
  2. 2.0 2.1 "Comprehensive Election results". இந்தியத் தேர்தல் ஆணையம் website இம் மூலத்தில் இருந்து 2012-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121207005023/http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx. பார்த்த நாள்: Feb 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_நிவாஸ்_கோயல்&oldid=3578540" இலிருந்து மீள்விக்கப்பட்டது