ராலே குறுக்கீட்டுமானி

ராலே குறுக்கீட்டுமானி (Rayleigh interferometer, ரேலி குறுக்கீட்டுமானி) ஒரு ஒளி மூலத்திலிருந்து வெளிவரும் இரு அலை கற்றைகளைக் கொண்டு செயல்படுகிறது. இரண்டு அலை கற்றைகளும் வெவ்வேறு ஒளிப் பாதையில் செல்கின்றன.[1] பின்னர் இவ்விரு ஒளிப்பாதைகளும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுக் குறுக்கீட்டு விளைவுக்கு உள்ளாக்கப்படுகிறது.

Rayleigh Interferometer
இணை கற்றையாக்கப்பட்ட ஒரியல்பு ஒளி, இரு வேறு ஒளி விலகல் எண் கொண்ட வாயுக்கள்  வழியாக சென்று பிம்பங்களை உருவாக்குகிறது

ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியானது, இரட்டை சிறுபிளவுகள் மூலம் பிரிக்கப்பட்டு, முதலாவது குவி வில்லை மூலம்  இரு இணை கற்றைகளாக மாற்றப்படுகிறது. இரு கற்றைகளும் மாறுபட்ட ஒளிப் பாதையில் பயணித்து, சரிகட்டும் தகட்டை (Compensating plate) அடைகின்றன.

இரண்டாவது குவி வில்லை, அவற்றைக் குவித்து குறுக்கீட்டு வரிகளை உருவாக்குகிறது. அலை நீளங்களைப் பொறுத்து ஒளிப் பாதையில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இச் சோதனை உதவுகிறது.

நன்மைகள் மற்றும் தீமைகள் தொகு

இந்த அமைப்பின் எளிய உருவாக்கமே ஒரு நன்மையாகும். இதன் தீமைகள் சில:

  • நல்ல குறுக்கீட்டு வரிகளை உருவாக்கும் ஒரு புள்ளி அல்லது கோட்டு ஒளி மூலம் தேவைப்படுகிறது.
  • பெரிய உருப்பெருக்கம் செய்த பிறகே குறுக்கீட்டு வரிகளைக் காண முடிகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராலே_குறுக்கீட்டுமானி&oldid=2749163" இலிருந்து மீள்விக்கப்பட்டது