ரிக்‌ஷா வண்டி, துவக்க காலத்தில் மக்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகும்.. இரு சக்கரங்கள் கொண்ட இந்த வண்டியில் மனிதனை வைத்து மனிதனால் இழுத்துச் செல்லப்பட்டது. . ரிக்‌ஷா எனும் என்ற சொல் 1887இல் பயன்பாட்டுக்கு வந்தது.[1] காலப்போக்கில் மூன்று சக்கர ரிக்‌ஷா வண்டிகள் மற்றும் இயந்திரத்தால் இயங்கும் ஆட்டோ ரிக்‌ஷா வண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது.. 19 ஆம் நூற்றாண்டில், ஆட்டோ-ரிக்‌ஷாக்கள் ஆசிய நாடுகளில் சாதாரண மக்களின் முக்கிய போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய வழிமுறையாக மாறியது. மகிழுந்து, பேருந்து மற்றும் தொடருந்துகளின் வருகையால் ரிக்‌ஷா வண்டிகள் தனது முக்கியத்துவத்தை இழந்தது. 21ஆம் நூற்றாண்டில் கூட, சில நகரங்களில் குறைந்த பயணச் செலவு காரணமாக ஆட்டோ-ரிக்‌ஷாக்கள் வாடகை மகிழுந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுகிறது.

மனைதனை ஏற்றிக் கொண்டு மனிதனால் இழுக்கப்படும், ரிக்‌ஷா, ஜப்பான், ஆண்டு 1897
சுற்றுலாப் பயணிகளுக்கான முச்சக்கர ரிக்‌ஷாக்கள், அசகுசா நகரம், ஜப்பான், ஆண்டு, 2015-காணொளி

சொற்பிறப்பியல்

தொகு

ரிக்‌ஷா எனும் சொல் ஜப்பானிய மொழிச் சொல்லான ஜின்ரிக்கிஷாவிலிருந்து பெறப்பட்டது ( 人力車, 人 ஜின் = மனித, 力 ரிக்கி = சக்தி அல்லது சக்தி, 車 ஷ = வாகனம்), அதாவது மனித உடலால் இயங்கும் வாகனம்.[2]

வரலாறு

தொகு

தோற்றம்

தொகு

கை ரிக்‌ஷாக்கள் முதன்முதலில் ஜப்பானில் 1869 இல் தயாரிக்கப்பட்டது.[3][4]

விளக்கம்

தொகு

கை ரிக்‌ஷாக்கள் இரண்டு பெரிய சக்கரங்களில் இயங்கும் ஒரு மரக் கூண்டைக் கொண்டிருந்தது. 1880 இல் கட்டப்பட்டதாக நம்பப்படும் ஜப்பானிய ரிக்சா, ஆஸ்திரேலியாவில் உள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதற்கு கதவுகள் இல்லை, இரண்டு சக்கரங்கள், நாற்காலி போன்ற கூண்டு கொண்ட இந்த ரிக்‌ஷாவில் ஒரு நபரை அமர்த்தி ஒரு மனிதன் இழுக்கும் அளவுக்கு இலகுவாக இருந்தது.

 
வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரத்தின் கை ரிக்‌ஷா, 19ஆம் நூற்றாண்டு

ஆசியாவில் மலிவான மற்றும் பிரபலமான போக்குவரத்து வடிவமாக மாறியது கை ரிக்‌ஷா. பெரிய ஆசிய நகரங்களுக்கு குடிபெயர்ந்த விவசாயிகள் பலர் கை ரிக்‌ஷா இழுப்பவர்களாக வேலை செய்தனர்.

20 ஆம் நூற்றாண்டு

தொகு
 
சீனா நாட்டின் பெய்ஜிங் நகரத்தில் பாரம்பரிய சைக்கிள்-ரிக்‌ஷா

1880ஆம் ஆண்டுகளில் கை ரிக்‌ஷாக்களுக்குப் பதில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அறிமுகமானது. இது 1929ல் சிங்கப்பூரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1950 ஆண்டுகளில் , தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் முச்சக்கர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் பிரபலமடைந்தன. 1980களின் இறுதியில் உலகம் முழுவதும் 4 மில்லியன் சைக்கிள் ரிக்சாக்கள் இருந்ததாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன

ஆசியா

தொகு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சைக்கிள் ரிக்‌ஷாக்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்தது. 1930களில் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ரயில்களின் ஆக்கிரமிப்பு காரணமாக ஜப்பானில் ரிக்‌ஷாக்களின் புகழ் குறையத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எரிபொருள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட வாகனங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது ரிக்‌ஷாக்கள் மீண்டும் புழக்கத்தில் வந்தது.

ரிக்‌ஷாக்களின் வகைகள்

தொகு
  1. கை-ரிக்‌ஷா -- ஒருவரால் இழுக்கப்படும் இரு சக்கர ரிக்‌ஷா (இதன் பெரும்பாலன பாகங்கள் அனைத்தும் மரத்தால் ஆனது).
  2. சைக்கிள்-ரிக்‌ஷா -- முச்சக்கர சைக்கிளில் இணைக்கப்பட்ட ரிக்‌ஷா (இதன் பெரும்பாலான பாகங்கள் இரும்பு & எஃக்கால் ஆனது)
  3. ஆட்டோ ரிக்சா -- பெட்ரோ அல்லது எரிவாயுவால் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட மூன்று சக்கர வண்டி
  4. மின்கல-ரிக்‌ஷா-- பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி

தமிழ்நாட்டில் கை ரிக்‌ஷா ஒழிப்பு

தொகு

தமிழ்நாட்டில் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மனிதால் இழுக்கப்படும் கை-ரிக்‌ஷாக்களை ஒழித்து, மூன்று சக்கரங்கள் கொண்ட சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்த, ரூபாய் 22 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.[5]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rickshaw". Merriam-Webster, Incorporated. பார்க்கப்பட்ட நாள் 10 April 2013.
  2. Chamberlain, Basil Hall (1891). Things Japanese: being notes on various subjects connected with Japan for the use of travellers and others. K. Paul, Trench, Trübner & Co., Ltd. pp. 241–242.
  3. James Francis Warren (2003). Rickshaw Coolie: A People's History of Singapore, 1880-1940. NUS Press. pp. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971692667.
  4. David Diefendorf (2007). Amazing . . . But False!: Hundreds of "Facts" You Thought Were True, But Aren't. Sterling Publishing Company. pp. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1402737916.
  5. How Karunanidhi funded his scheme to stamp out hand-rickshaws in T.N.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்‌ஷா&oldid=4149822" இலிருந்து மீள்விக்கப்பட்டது