ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல்
ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல் (Richard Lionel Spittel, டிசம்பர் 9, 1881 – செப்டம்பர் 3, 1969) என்பவர் இலங்கையின் பரங்கி இனத்தைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளரும் ஆவார். இலங்கை வேடுவ சமூகத்தைப் பற்றிய இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.[1]
ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டல் Richard Lionel Spittel | |
---|---|
பிறப்பு | டிசம்பர் 9, 1881 தங்காலை |
இறப்பு | 3 செப்டம்பர் 1969 கொழும்பு | (அகவை 87)
தேசியம் | இலங்கை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி |
பணி | அறுவை மருத்துவர் |
வாழ்க்கைத் துணை | மரு. கிளாரிபெல் வான் டோர்ட் |
பிள்ளைகள் | கிறிஸ்டீன், ஐவொன் |
கல்வியும் பணியும்
தொகுஇலங்கையின் தெற்கே தங்காலையில் மரு. பிரெடெரிக் ஜோர்ஜ் ஸ்பிட்டெல் என்பவருக்கும், சீலியா ஜான்சு என்பவருக்கும் பிறந்த ரிச்சர்ட் ஸ்பிட்டெல் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் இலங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி கற்று 1905 ஆம் ஆண்டில் அறுவை மருத்துவராகப் பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் அவர் அரச மருத்துவப் பணியில் சேவையாற்றினார். 1906 ஆம் ஆண்டில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். 1909 இல் FRCS பட்டம் பெற்று 1910 ஆம் ஆண்டில் திரும்பினார்.
கொழும்பு பொது மருத்துவமனையில் அறுவை மருத்துவராக பணியில் அமர்ந்தார். இலங்கை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றிய பின்னர் 1935 ஆம் ஆண்டில் இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னர் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டில் இவர் மருத்துவத்தில் ஆற்றிய சேவைக்காக பிரித்தானிய அரசு 1942 ஆம் ஆண்டில் Commander of the Order of the British Empire பட்டத்தையும், 1950 இல் Companion of the Order of St Michael and St George பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தது. பிரித்தானிய மருத்துவக் கழகத்தில் உறுப்பினராக இருந்த இவர்,[2] அதன் இலங்கைக் கிளைக்கு 1940 முதல் 1946 வரை தலைவராக இருந்தார். இலங்கை டச்சு பரங்கியர் ஒன்றியத்தின் தலைவராக 1936 முதல் 1938 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.
எழுத்தாளர்
தொகுஇயற்கை-விரும்பியான இவர், இலங்கையின் காடுகளுக்குப் பல முறை பயணம் மேற்கொண்டு, இலங்கையின் பழங்குடிகளான வேடுவர் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, புதினங்கள், கவிதைகள், மற்றும் ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார்.[3]
ஆக்கங்கள்
தொகுபுதினங்கள்
தொகு- Savage Sanctuary
- Vanished Trails
- Wild White Boy
- Where the White Sambhur Roams
- Brave Island
ஏனையவை
தொகு- Wild Ceylon
- Far-off things
கவிதை நூல்கள்
தொகு- Leaves of the Jungle
மருத்துவ நூல்கள்
தொகு- A Basis of Surgical Ward Work
- Framboesia Tropica
- Essentials of Surgery
மேற்கோள்கள்
தொகு- ↑ Dr. R. L. Spittel: Surgeon of the wilderness
- ↑ R. L. Spittel, C.M.G., C.B.E., L.M.S., F.R.C.S., British Medical Journal, 1969
- ↑ R. L. Spittle: Master writer of the wilds, by J. A. K. Jayakody பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம், சிலோன் டெய்லி நியூஸ், டிசம்பர் 9, 2002