ரிச்சா சிங்
ரிச்சா சிங் (Richa Singh) ஓர் இந்திய கணினி அறிவியலாளர். இவர் உயிரியளவியலில் முக அங்கீகார அமைப்பு மற்றும் கருவிழி அங்கீகாரம் குறித்த ஆய்வினை மேற்கொள்கின்றார். சிங் ஜோத்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும் கணினி அறிவியல் துறைத் தலைவராகவும் உள்ளார்.[1]:{{{3}}}
கல்வி மற்றும் தொழில்
தொகுசிங் 2008ஆம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கணினி அறிவியலில் இவரது ஆய்வு முக அங்கீகாரத்தில் கோவாரியட்டுகளின் விளைவைத் தணிப்பது ஆகும். அஃப்செல் நூரால் மேற்பார்வையிடப்பட்டது[2]:{{{3}}}
அவர் 2009 இல் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் உதவிப் பேராசிரியரானார், மேலும் 2015 இல் இணைப் பேராசிரியராகவும், 2019 இல் முழுப் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஜோத்பூரில் உள்ள ஐஐடியில் தனது தற்போதைய நிலைக்கு மாறினார்.[3]:{{{3}}}
அங்கீகாரம்
தொகுசிங் 2018-இல் பேட்டர்ன் ரெகக்னிஷனுக்கான பன்னாட்டுச் சங்கத்தின் சகாவாக நியமிக்கப்பட்டார். "முக அங்கீகாரம் மற்றும் வடிவ வகைப்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக" இவருக்கு இந்த மதிப்பு வழங்கப்பட்டது.[4]:{{{3}}} "பல்லூடக நெறிமுறைகள் மற்றும் இணையத் தரங்களுக்கான பங்களிப்புகளுக்காக" 2021ஆம் ஆண்டு கூட்டாளிகளின் ஐஇஇஇ சகாவாக நியமிக்கப்பட்டார்.[5]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ "Faculty & Advisors", Department of Computer Science & Engineering, IIT Jodhpur, பார்க்கப்பட்ட நாள் 2023-05-04
- ↑ Singh, Richa (2008), Mitigating the Effect of Covariates in Face Recognition (Doctoral dissertation), West Virginia University, பார்க்கப்பட்ட நாள் 2023-05-04
- ↑ "Richa Singh", ORCiD, பார்க்கப்பட்ட நாள் 2023-05-04
- ↑ Alphabetical list of Fellows, International Association for Pattern Recognition, பார்க்கப்பட்ட நாள் 2023-05-04
- ↑ Newly elevated Fellow class 2021 (PDF), IEEE, பார்க்கப்பட்ட நாள் 2023-05-04
வெளி இணைப்புகள்
தொகு- முகப்பு பக்கம்
- Richa Singh வெளியீடுகள்