ரித்திகா நாயக்
ரித்திகா நாயக் (Ritika Nayak) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் பணியாற்றி வருகிறார். ரித்திகா, 2022 இல் ரவி கிரண் கோலா எழுதி, வித்யா சாகர் சிந்தா இயக்கத்தில் வெளிவந்த அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.[1][2][3]
ரித்திகா நாயக் | |
---|---|
பிறப்பு | மே 15, 1997 புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | வடிவழகி , நடிகை |
அறியப்படுவது | அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் தெலுங்கு திரைப்படம் |
தொடக்ககால வாழ்க்கை
தொகுரித்திகா, மே 15,1997 இல் புது தில்லியில் பிறந்தார்.
தொழில்
தொகுரித்திகா, 2019 இல் தனது கல்லூரி நாட்களில் பொழுதுபோக்கு உலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். தில்லியில் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 12 மற்றும் மிஸ் திவா 2020 போன்ற குறிப்பிடத்தக்க பட்டங்களைப் பெற்று, வடிவழகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] 2022 இல் ரவி கிரண் கோலா எழுதி, வித்யா சாகர் சிந்தா இயக்கத்தில் வெளிவந்த அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | மொழி |
---|---|---|---|
2022 | அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் | வித்யா சாகர் சிந்தா | தெலுங்கு |
2023 | hi நான்னா | ஷௌர்யவ் | தெலுங்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ritika Nayak". www.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-07.
- ↑ "ritika nayak thanks the team of ashoka vanam lo arjuna kalyanam for vasudha". timesofindia.indiatimes.com. 2022-05-13. பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.
- ↑ Desk, Tupaki (2024-12-05). "Ritika Nayak's Elegant Dress Will Make You Want to Copy Her Look". www.tupaki.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.
- ↑ "mini biography". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.
- ↑ "Hi Nanna (2023) - IMDb". www.imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.