ரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1897 ஆம் ஆண்டில் வெளிவந்தது. [1]

வரலாறு தொகு

ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதார்நாத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. இதன் தமிழ் ஓலி வடிவத்தினை ரமணாச்சிரம இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். [2]

நூலடக்கம் தொகு

ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய கதை தொகு

ரிபுவின் சீடர் நிதாகர். நிதாகருக்கு உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு வரவில்லை. ரிபு சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பார். ஒரு முறை ஞானி நிதாகரை சோதிக்க என்னி அவர் இருக்கும் ஊருக்கு ரிபு வேற்றுருவில் சென்றார். அப்போது அவ்வூர் அரசன் ஓரு பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அப்போது நிதாகர் பசி மயக்கத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து நிதாகரைப் பார்த்து "ஏன் இங்கு நிற்கிறீர்கள்?" என்றார்.

அதற்கு நிதாகரோ அவரிடம் "அரசன் நகர் வலம் வருகிறார். கூட்டமாக இருக்கும் காரணத்திணால் ஒதுங்கி இருக்கிறேன்" என்றார்.அதைக் கேட்ட ரிபு "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்?" என வினவினார். நிதாகர் அவரைப் பார்த்து "உங்களுக்கு கண் தெரியவில்லையா குன்று போலிருக்கும் இந்த யானையில் அமர்ந்திருக்கிறார் அல்லவா, அவரே அரசர். அவரை சுற்றியிருக்கும் மற்றவர்கள் மக்கள்" என்றார். ரிபு மீண்டும் ஒன்றும் அறியாதது போல "இரண்டு பொருட்களை சுட்டி ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்கு விளக்குங்கள்" என்றார்.

அதற்கு நிதாகர் , "ஐயா! கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர் இதில் என்ன குழப்பம் இது கூடவா புரியவில்லை" என்றார். அதற்கு ரிபுவோ "கீழ், மேல் என்றால் என்ன? அதை விளக்குங்கள்" என்றார். கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகர்!! அரசன் யானை மேல் அமர்ந்நிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழே உள்ளது யானை, இங்கு நீங்கள். மேலேயிருப்பது இருப்பது நான் கீழே இருப்பது நீ இப்போது புரிகிறதா" என்றார்.

அதற்கு ரிபுவோ முதலில் நான், நீ என்பவற்றை விளக்குங்கள். பின்பு அதை வைத்துதான் அரசனையும், யானையும் புரிந்து கொள்ள இயலும். இந்தக் கேள்வியைக் கேட்டதும் வந்திருப்பவர் தனது குருவான ரிபு எனப் புரிந்து கொண்டார் நிதாகர். புலன்களுக்கு தெரியும் இந்த வேற்றுமை உடல் சார்ந்த்து இது அனைவருக்கும் புலப்படும். ஆனால் ஆத்மஞானம் பெற்ற ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமிடையே வேற்றுமையே கிடையாது.

மேற்கோள்கள் தொகு

  1. ஆங்கிலப் புத்தகம் - The Song of Ribhu: Translated from the Original Tamil Version of the Ribhu Gita
  2. http://www.sriramanamaharshi.org/resource_centre/audio/sri-ribhu-gitai/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிபு_கீதை&oldid=2930906" இலிருந்து மீள்விக்கப்பட்டது