உறுகுணை பல்கலைக்கழகம்

(ருகுண பல்கலைக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உறுகுணை பல்கலைக்கழகம் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலியிலும் அமைந்துள்ளது. 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது 7 பீடங்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

உறுகுணை பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைPaññāya Narānaṅ Ratanaṅ (பாளி)
வகைPublic
உருவாக்கம்1978
வேந்தர்Venerable Pallattara Sumanajothi Thero
துணை வேந்தர்Prof. Gamini Senanayake
நிருவாகப் பணியாளர்
1144 (366 teaching)
மாணவர்கள்6366
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்100
அமைவிடம்,
இணையதளம்http://www.ruh.ac.lk/

சரித்திரம்

தொகு

தென்னிலங்கை மக்களின் அபிலாசையான தெற்கில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதிபரின் ஆணைப்படி செப்தெம்பர் 1, 1978 இல் தொடங்கப்பட்டது.

இது இன்றுவரை 10,000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள், 75 மேற்பட்ட பட்டப்பின் பட்டதாரிகளை உருவாக்கியதோடு தற்போது பல்வேறு துறைகளில் 100இற்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களையும் கொண்டுள்ளது.

பீடங்கள்

தொகு
  • விவசாய பீடம்
  • பொறியியற் பீடம்
  • மீன்பிடி மற்றும் கடல் சார் தொழில் நுட்பம்
  • சமூகவிஞ்ஞானம்
  • நிதி மற்றும் நிர்வாக பீடம்
  • மருத்துவ பீடம்
  • விஞ்ஞான பீடம்

இது இலங்கையில் பெரிய பேராதனைப் பல்கலைக் கழகம் போன்று 7 பீடங்களைக் கொண்டுள்ளது.

இதன் பிரதான வளாகமானது மாத்தறை நகரின் வெல்லமடமவில் அமைந்துள்ளது. இதன் விவசாய பீடம் கம்புறுப்பிட்டியில் அமைந்துள்ளது பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் காலியின் கராப்பிட்டிய, ஹபுகல ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Student Enrolmentof Sri Lankan Universities" (PDF). University Grants Commission of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  2. Gunawardena, Charles A. (2005). Encyclopedia of Sri Lanka. India: Sterling Publishers Pvt. Ltd. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1932705481.
  3. Gunawardena, Chandra. "Matching education with employment in Sri Lanka." Higher Education Review 15.1 (1982): 58.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுகுணை_பல்கலைக்கழகம்&oldid=3899774" இலிருந்து மீள்விக்கப்பட்டது