செப்டம்பர் 1
நாள்
(செப்தெம்பர் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.[1][2]
- 1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.
- 1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.
- 1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.
- 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.
- 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
- 1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.
- 1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1859 – 1859 சூரியப் புயல் இடம்பெற்றது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.
- 1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.
- 1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.
- 1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
- 1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.
- 1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.
- 1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.
- 1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.
- 1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.
- 1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.
- 1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.
- 1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
- 1981 – மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
- 2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
- 1593 – மும்தாஜ் மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி (இ. 1631)
- 1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)
- 1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)
- 1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)
- 1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ஆன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)
- 1925 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2018)
- 1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)
- 1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)
- 1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)
- 1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)
- 1935 – அய்க்கண், தமிழக எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் (இ. 2020)
- 1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)
- 1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை
- 1965 – சுலக்சனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குநர்
- 1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை
- 1980 – கரீனா கபூர், இந்திய நடிகை
இறப்புகள்
- 870 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810)
- 1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)
- 1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)
- 1581 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534)
- 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)
- 1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910
- 1972 – செ. கதிர்காமநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1942)
- 1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1913)
- 1983 – மறை. திருநாவுக்கரசு, தமிழகத் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
- 1987 – தமிழரசன், தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர் (பி. 1945)
- 1988 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1911)
- 2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)
- அறிவு நாள் (உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)
மேற்கோள்கள்
- ↑ Guzmán, L. (February 14, 2019). "Encuentran registros de megaterremoto ocurrido hace seis siglos en el norte de Chile" (in Spanish). El Mercurio (Santiago, Chile). http://www.economiaynegocios.cl/noticias/noticias.asp?id=546452.
- ↑ Manuel Abad, Tatiana Izquierdo, Miguel Cáceres, Enrique Bernárdez and Joaquín Rodríguez‐Vidal (2018). Coastal boulder deposit as evidence of an ocean‐wide prehistoric tsunami originated on the Atacama Desert coast (northern Chile). Sedimentology. Publication: december, 13th, 2018. https://doi.org/10.1111/sed.12570
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 1 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்