1100
1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1100 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1100 MC |
திருவள்ளுவர் ஆண்டு | 1131 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1853 |
அர்மீனிய நாட்காட்டி | 549 ԹՎ ՇԽԹ |
சீன நாட்காட்டி | 3796-3797 |
எபிரேய நாட்காட்டி | 4859-4860 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1155-1156 1022-1023 4201-4202 |
இரானிய நாட்காட்டி | 478-479 |
இசுலாமிய நாட்காட்டி | 493 – 494 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1350 |
யூலியன் நாட்காட்டி | 1100 MC |
கொரிய நாட்காட்டி | 3433 |
நிகழ்வுகள்
தொகுஅமெரிக்காக்கள்
தொகு- இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற முதலாவது குடியேற்றம் இங்குள்ள ஒராய்பி (இன்றைய அரிசோனாவில்) என்ற ஊரில் இடம்பெற்றது.
- பெருவில் குசுக்கோ நகரம் அமைக்கப்பட்டது.
ஆசியா
தொகு- சொங் சீனாவின் மக்கள்தொகை அண்ணளவாக 100 மில்லியனைத் தாண்டியது.
- சொங் சீனாவின் பேரரசராக குயிசோங் முடிசூடினார்.
- சனவரி – பக்தாதில் ருந்து செல்யூக் பேரரசர் முதலாம் மகுமுது அவரது சகோதரனால் வெளியேற்றப்பட்டார், ஆனாலும் சில மாதங்களில் அவர் மீண்டும் நகரை மீளக் கைப்பற்றினார்.[1]
- ஆகத்து 1 – சிலுவைப் போர்வீரர்கள் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு உதவும் முகமாக செனோவாக் கடற்படைக் கப்பல்கள் இத்தாலியில் இருந்து புறப்பட்டன. இவை லத்தாக்கியா நகரை செப்டம்பர் 25 இல் சென்றடைந்தன.[2]
- ஆகத்து 20 – வெனிசியர்களின் உதவியுடன் சிலுவைப் போர்வீரர்கள் கைஃபா என்ற இத்தாலியக் கரையோர நகரைக் கைப்பற்றினர்.
- டிசம்பர் 25 – எருசலேமின் மன்னர் காட்ஃபிறீ சூலை 18 இல் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் பால்டுவின் எருசலேமின் மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடி சூடினார்.[3]
- கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக செனோவா, வெனிசு, பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன.
ஐரோப்பா
தொகு- ஆகத்து 2 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
- ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
- செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
- நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
- ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
சமயம்
தொகு- எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளெமெண்டு இறந்ததை அடுத்து, புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் ஆதரவாளர்கள் தியோதோரிக் என்பவரை எதிர் திருத்தந்தையாக உரோமை நகரில் தேர்ந்தெடுத்தார்கள்.
- பரோயே பேராயம் நிறுவப்பட்டது.
வேறு
தொகு- காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7096-0547-2.
- ↑ Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-487-04756-0.
- ↑ "Baldwin I of Edessa". Archived from the original on 2010-05-09. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
- ↑ "Communal Courts". Archived from the original on 23 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
- ↑ "The history of checkers". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.