பத்மநாதன் இராமநாதன்
தேசமானிய பத்மநாதன் இராமநாதன் (Pathmanathan Ramanathan, 1 செப்டம்பர் 1932 - 7 டிசம்பர் 2006) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மீயுயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாகவும், மேல் மாகாண ஆளுநராகவும் பதவியில் இருந்தவர்.[1][2]
பி. இராமநாதன் P. Ramanathan | |
---|---|
இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதி | |
மேல் மாகாணத்தின் 4வது ஆளுநர் | |
பதவியில் 21 சனவரி 2000 – 1 பெப்ரவரி 2002 | |
முன்னையவர் | கே. விக்னராஜா |
பின்னவர் | அலவி மௌலானா |
ஊவா வெல்லச பல்கலைக்கழக வேந்தர் | |
பதவியில் 27 சூலை 2005 – 7 டிசம்பர் 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1932 |
இறப்பு | 7 திசம்பர் 2006 கொழும்பு, இலங்கை | (அகவை 74)
துணைவர் | மனோ சரவணமுத்து |
முன்னாள் கல்லூரி | கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி, மொன்ட்ஃபோர்ட் கல்லூரி புனித தாவீது கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுசங்கரப்பிள்ளை பத்மநாதன், மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர்த்தியான சிறீமணி என்பவருக்கும் பிறந்தவர் இராமநாதன்.[1][3] இராமநாதன் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், தென்னிந்தியாவில் மொன்ட்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1][3][4][5] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று வேல்சு பல்கலைக்கழகத்தின் புனித தாவீது கல்லூரியில் உயர்கல்வி கற்றார்.[1][3][4][5]
இராமநாதன் கொழும்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா சரவணமுத்து என்பவரின் மகள் மனோ என்பவரை திருமணம் புரிந்தார்.[6]
பணி
தொகுஇலங்கை திரும்பிய பின்னர் இராமநாதன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சில காலம் பணியாற்றினார்.[3] பின்னர் மீயுயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1][5] 1970களின் இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடிக்குரிய வழக்குரைஞராக இணைந்தார்.[1][3][4][5] 1978 இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாத்தறை, அனுராதபுரம், குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் பணியாற்றினார்.[1][3][4][5] 1985 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1][3][5] பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரானார்.[3][5] அதன் பின்னர் மீயுயர் நீதிமன்ற நீதிபதியானார்.[1][3][4][5]
இராமநாதன் டென் ஹாக் நிரந்தர நடுவர் நீதிமன்ற உறுப்பினராகவும், இந்தோ-பசிபிக் சட்ட சபை உறுப்பினராகவும், பிரித்தானிய அறிஞர்கள் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3][4] இலங்கையின் இரண்டாவது உயர் விருதான தேசமானிய விருதை அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இருந்து பெற்றார்.[3][4]
இறுதிப் பகுதி
தொகுமீயுயர் நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், இராமநாதன் 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் 4வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1][3][5] 2002 பெப்ரவரி வரை அவர் அப்பதவியில் இருந்தார். பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[7] இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும், பொன்னம்பலவாணேசுவரர் கோயில் உட்படப் பல இந்து சமய நிறுவனங்களின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1][3] சுழல் கழக உறுப்பினராகவும், மற்றும் விடுதலைக் கட்டுநராகவும் இருந்து சேவையாற்றினார்.[1]
இராமநாதன் 2006 டிசம்பர் 7 ஆம் நாள் கொழும்பில் காலமானார்.[1][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Sanmuganathan, Muttusamy (1 செப்டம்பர் 2009). "Remembering Justice Ramanathan: A Man for All Seasons". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060328/http://www.island.lk/2009/09/01/features2.html.
- ↑ ஜி. எல். பீரிஸ் (4 டிசம்பர் 2008). "An exceptional, rare person in the cynical times". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2008-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207041604/http://www.dailynews.lk/2008/12/04/fea03.asp.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 Maniccavasagar, Kalabhooshanam Chelvatamby (15 சனவரி 2007). "Deshamanya Justice Ramanathan - a colossus, multi-dimensional and multi-faceted personality". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2013-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218224301/http://www.dailynews.lk/2007/01/15/fea20.asp.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Amarasingham, Kumudu (27 நவம்பர் 2005). "Justice Ramanathan: A fairer view of life". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20051127/review.htm.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Malalasekera, Sarath (13 செப்டம்பர் 2010). "Legal luminaries who lit up the Bar". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2013-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130219002809/http://www.dailynews.lk/2010/09/13/fea25.asp.
- ↑ Goonesekere, R. K. W. (31 ஆகத்து 2011). "1st September Birthday Tribute Justice P. Ramanathan". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303235905/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=5622.
- ↑ Edirisinghe, Dasun (30 சூலை 2005). "Sarath Amunugama appointed Vice Chancellor". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000308/http://www.island.lk/2005/07/30/news30.html.
- ↑ de Silva, G. P. S. (7 டிசம்பர் 2008). "Justice P. Ramanathan". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304045402/http://www.island.lk/2008/12/07/features5.html.
- ↑ "Death of Deshamanya Justice P. Ramanathan". டெய்லிநியூஸ். 8 டிசம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2012-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730164754/http://www.dailynews.lk/2006/12/08/news10.asp.