ருச்சி சர்மா (பாடகர்)
ருச்சி சர்மா (பிறப்பு 21 மே 1992) ஹரியானாவிலுள்ள பிவானியைச் சேர்ந்த ஒரு இந்தியப் பாடகி ஆவார். 2008 ஆம் ஆண்டு ஷான் வடிவமைத்து, சாய் பாபா டெலிஃபிலிம்ஸ் தயாரித்த, ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடகர்களைக் கண்டரியும் திறமை நிகழ்ச்சியில் ஸ்டார் இந்தியாவின் குரல் - 2ம் பாகம் இல் அரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ருச்சி சர்மா | |
---|---|
பிறப்பு | 21 மே 1992 |
பிறப்பிடம் | பிவானி, அரியானா, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, திரையிசை |
இசைத்துறையில் | 2008 ம் ஆண்டு முதல் |
வரலாறு
தொகுஅனில் சர்மா மற்றும் கீதா ஷர்மா ஆகியோருக்கு மகளாக ஹரியானா மாநிலம் பிவானியில் பிறந்தவர் ருச்சி . உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பாரம்பரிய இசை மற்றும் பாடலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். எனவே தங்கள் மகளையும் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் பாடல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தினர். [1]
இசை வாழ்க்கை
தொகு2007 ஆம் ஆண்டில், அமுல் இந்தியாவின் குரல் நட்சத்திரம்-சின்ன பாடகர்கள் முதல் பாகத்தில் முதலிருபது பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலிடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும், இந்நிகழ்ச்சி இவரது பாடல் திறமையை மென்மேலும் முன்னேற்றும் அளவிற்கு இசைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மரியாதைக்குரிய படே உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் என்பவரிடம் இசையின் நுணுக்கங்களையும், பாடங்களையும் கற்றுள்ளார்.
யுவ ரத்னா விருது பெற்றவரும், 2007 ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதுபெற்ற பண்டிதரான ராஜன் மிஸ்ராவின் மகனுமான ரித்தேஷ் மிஸ்ராவிடம் இவர் பாடல்களைப் பற்றியும் ராகங்களைப் பற்றியும் கற்றுள்ளார். இசை மற்றும் பாடல் இரண்டிலும் முறையாக கற்ற பின்னர், இவர்ர் பனாரஸ் குரல் கரானாவின் அதிபதிகளைப் போல கருதப்படும் பண்டிட்கள் ராஜன்-சாஜன் மிஸ்ராவுடன் இணைந்து பாடியுள்ளார்.மேலும் மும்பையில் ஹேமந்த் குமாரின் மருமகன் கௌதம் முகர்ஜியிடம் ஹிந்துஸ்தானி குரலிசைப் பாடம் படித்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்திய பாரம்பரிய இசையிலும் சங்கீத் விசாரத்தை முடித்துள்ளார்.
ருச்சி தனது முதல் படமான “ஹம் தோ அஞ்சானே” திரைப்படத்தில் “ரேஷம் சி” என்ற பாடலைப் பாடியுள்ளார்.[2]