ரூத் ஹாரிசன்

ரூத் ஹாரிசன் (Ruth Harrison, 24 சூன் 1920-13 சூன் 2000) பிரித்தானிய நாட்டைச் சார்ந்த விலங்குகள் நல ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார்[1].

ரூத் ஹாரிசன்
OBE
பிறப்புரூத் வின்ஸ்டென்
(1920-06-24)24 சூன் 1920
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு13 சூன் 2000(2000-06-13) (அகவை 79)
இலண்டன், இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்பெட்ஃபோர்டு கல்லூரி, இலண்டன்
பணிவிலங்கு நல ஆர்வலர், எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அனிமல் மெஷின்ஸ் (1964)
வாழ்க்கைத்
துணை
டெக்ஸ் ஹாரிசன் (தி. 1954)

இவருடைய தந்தையார் சுடீபன் வின்சுடன், சார்ஜ் பெர்னாட்சாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்; தாயார் கிளேர் வின்சடன் சிறந்த ஓவியர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் குவாக்கர் இயக்கத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு எதிர்ப்பாளராகவும், முதலுதவிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டும் இருந்தார்.

1964 ஆம் ஆண்டு 'அனிமல் மெசின்சு' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.[2] இந்நூல் விலங்குகளுக்கும், கோழிகளுக்கும் பண்ணைகளில் ஏற்படும் கொடுமைகளை விளக்கியது.[3] இந்நூல் ஏழு நாடுகளில் வெளியிடப்பட்டது.[4] இந்நூல் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாக 1968 ல் பிரிட்டனில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகளின் நலன் சார்பான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானிய அரசு இவருக்கு 'ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிசு எம்பயர்' என்ற விருதினை வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_ஹாரிசன்&oldid=4075653" இலிருந்து மீள்விக்கப்பட்டது