ரூபன் பிளைஷர்
ரூபன் சாமுவேல் பிளைஷர் (ஆங்கில மொழி: Ruben Samuel Fleischer) (பிறப்பு: அக்டோபர் 31, 1974) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் இசை காணொளி இயக்குநர் ஆவார்.
ரூபன் பிளைஷர் Ruben Fleischer | |
---|---|
பிறப்பு | ரூபன் சாமுவேல் பிளைஷர்[1] அக்டோபர் 31, 1974 வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், இசை காணொளி இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கோலி சாகூர் (தி. 2012) [2] |
இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான 'சோம்பிலாண்ட்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், பின்னர் அதன் தொடர்ச்சியான 'சோம்பிலாண்ட்: டபுள் தாப்' (2019) ஆகியவற்றின் இயக்குனராக அறியப்படுகிறார்.[3] அதை தொடர்ந்து கேங்க்ஸ்டர் ஸ்குவாட்[4] மற்றும் அன்சார்ட்டட் போன்ற படங்களையும், 2018 ஆம் ஆண்டு முதல் அதே பெயரில் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தைக் கொண்ட வெனம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.[5] அத்துடன் பல தொலைக்காட்சி விளம்பரங்களையும், பல இசை காணொளிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம்
தொகுஆண்டு | தலைப்பு | இயக்குநர் | நிர்வாகம் தயாரிப்பாளர் |
---|---|---|---|
2009 | சோம்பிலாண்ட் | ஆம் | இல்லை |
2011 | 30 மினிட்ஸ் ஓர் லெஸ் | ஆம் | இல்லை |
2013 | கேங்க்ஸ்டர் ஸ்குவாட் | ஆம் | ஆம் |
2018 | வெனம் | ஆம் | இல்லை |
2019 | சோம்பிலாண்ட்: டபுள் தாப் | ஆம் | ஆம் |
2022 | அன்சார்ட்டட் | ஆம் | ஆம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jennings, Hughes, Wilkes, Webber, Aldridge U.K.:Information about Ruben Samuel Fleischer". Familytreemaker.genealogy.com. August 15, 1996. பார்க்கப்பட்ட நாள் January 7, 2013.
- ↑ "Emma Stone officiates a wedding – just like these other celebrities". UsMagazine.com. November 14, 2012. பார்க்கப்பட்ட நாள் January 11, 2013.
- ↑ Michael Kennedy (March 23, 2017). "Zombieland 2 Writers Reveal Script is Completed". Screen Rant. https://screenrant.com/zombieland-2-script-completed/.
- ↑ Sneider, Jeff; Kroll, Justin (July 26, 2011). "Emma Stone rounds up 'Gangster Squad'". Variety (Reed Business Information) இம் மூலத்தில் இருந்து January 8, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120108144431/http://www.variety.com/article/VR1118040460.
- ↑ Kroll, Justin (October 10, 2016). "Tom Hardy to Star in 'Spider-Man' Movie 'Venom,' Ruben Fleischer to Direct". Variety.