ரூபா ஐயர்

இந்திய நடிகர், வடிவழகி மற்றும் திரைப்பட இயக்குனர்

ரூபா ஐயர் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகையுமாவார். ரூபா ஐயர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரும், நடன இயக்குனரும் விளம்பரப்பெண்ணும் என பன்முக திறமையான ஆளுமை கொண்டவர். எழுத்தாளராகவும், நல்லதொரு பரோபகாரியாகவும் கூட இவர் இருந்துள்ளார்.

ரூபா ஐயர்
பிறப்பு24 சூலை 1982 (1982-07-24) (அகவை 42)
பெலகவாடி, மண்டியா, கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர், நடிகை
வாழ்க்கைத்
துணை
கெளதம் சிறிவத்சா (தி. 2014)

திரைத்துறை

தொகு

யாரே நீனு செலுவே என்ற 1998 ம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் துணை நடிகையாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர், 2007 ம் ஆண்டு வெளியான "தாது" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் 2010 ம் ஆண்டு வெளியான முகபுதா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.[1][2] 2013 ஆம் ஆண்டில், அவர் தனது இருமொழி களில் வெளியான, மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட சந்திராவை கன்னடம் மற்றும் தமிழில் இயக்கி தயாரித்துள்ளார்.[3]

திரைப்படவியல்

தொகு
  • குறிப்பு: குறிப்பிடாத வரை அனைத்து படங்களும் கன்னடத்தில் எடுக்கப்பட்டவையே.
ஆண்டு திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் நடிகர் குறிப்புகள்
2007 தாது இல்லை இல்லை இல்லை ஆம்
2010 முகபுடா ஆம் இல்லை ஆம் ஆம்
2013 சந்திரா ஆம் ஆம் ஆம் இல்லை ஒரே நேரத்தில் தமிழில் படமாக்கப்பட்டது

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_ஐயர்&oldid=3743916" இலிருந்து மீள்விக்கப்பட்டது