ரூபா கங்குலி

இந்திய நடிகை, அரசியல்வாதி

ரூபா கங்குலி (பிறப்பு 25 நவம்பர் 1966) ஒரு இந்திய நடிகை, பின்னணி பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[5] பி.ஆர் சோப்ராவின் தொலைக்காட்சித் தொடரான மகாபாரதம் (1988) நாடகத்தில் திரௌபதியின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர் இவர். மர்னல் சென் , அபர்னா சென் , கௌதம் கோஸ் மற்றும் ரிருபருனோ கோஷ் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். இவர் முறையாக பயிற்சி பெற்ற பாடகர் மற்றும் நடனக்கலைஞர்.[6] தனது நடிப்புகாக தேசிய விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] அக்டோபர் மாதம், 2015, மாநிலங்களவையின் உறுப்பினராக , இந்தியாக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் .[7]மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் அணித்தலைவராக அவர் பணியாற்றினார்.[8]

ரூபா கங்குலி
ரூபா கங்குலி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மாளிகையில், பதவியேற்பு விழாவில்.
பிறப்பு25 நவம்பர் 1966 (1966-11-25) (அகவை 57)[1]
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
பாடகி
அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1985–2015
வாழ்க்கைத்
துணை
துருபா முகர்ஜி (1992–2006, மணமுறிவு)[2]
பிள்ளைகள்ஆகாஷ் முகர்ஜி[3]
விருதுகள்சிறந்த பாடகருக்கான தேசிய விருது (2011)
ரூபா கங்குலி
எம்.பி of மாநிலங்களவை (நியமிக்கப்பட்டார்) [4]
பதவியில் உள்ளார்
பதவியில்
4 October 2016
முன்னையவர்நவ்ஜோத் சிங் சித்து
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாஜக

ஆரம்ப வாழ்க்கை தொகு

ரூபா இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே கல்யாணி என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஓர் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார். கொல்கத்தாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரியான ஜோகமயா தேவி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[9]

தொழில் தொகு

வங்காள நாடகமான முக்தபந்தனாவில் (1985) நடித்ததன் மூலம் பரவலாக அனைவராலும் அறிப்பட்டு புகழ்பெற்றார்.[10] 1986இல் கணதேவதா என்ற இந்தி நாடகத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் அறிப்பட்டார். பின்னர் மகாபாரதம் என்ற நீண்ட கால இந்தி நாடகத்தில் திரௌபதியாக நடித்ததில் இந்திய அளவில் புகழ் பெற்றார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

கங்குலி 1992 முதல் 2006 வரை துர்போ முகர்ஜி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்தார். அவர்கள் 1997 இல் ஒரு குழந்தை பெற்றனர்.[2] பின்னர் அவர்களுக்கிடையே மணமுறிவு ஏற்படும் வரை மும்பையில் வசித்துவந்தனர்.[12][13]

குறிப்புகள் தொகு

  1. "Roopa Ganguly". StarsFact.Com. Archived from the original on 2018-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
  2. 2.0 2.1 "I attempted suicide thrice:". The Times of India. 29 September 2009 இம் மூலத்தில் இருந்து 27 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130627160510/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-29/tv/28085294_1_marriage-kya-rupa-ganguly. பார்த்த நாள்: 5 November 2012. 
  3. "Roopa Ganguly". www.onenov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. BJP's Roopa Ganguly nominated for Sidhu's post in Rajya Sabha - The Economic Times
  5. "Roopa Ganguly movies, filmography, biography and songs - Cinestaan.com".
  6. 6.0 6.1 "Directorate of Film Festival". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  7. "Actor Roopa Ganguly nominated to Rajya Sabha". http://indianexpress.com/article/india/india-news-india/roopa-ganguly-nominated-to-rajya-sabha/. 
  8. "'Mahabharat' Actress Rupa Ganguly To Head BJP's West Bengal Women's Wing".
  9. "கல்லூரி வரலாறு". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  10. "10 Bengali Actresses Who Made It Big From The Small Screen To Cinema" (in en). pyckers இம் மூலத்தில் இருந்து 2018-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819182131/https://pycker.com/articles/10-tollywood-actresses-who-started-their-career-with-small-screen. 
  11. "Rupa Ganguly". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
  12. யாரும் ரூ 1 கோடி வெற்றி 'முழு உண்மை' கூறினார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் , பிரியங்கா ஸ்ரீவத்சவா, புது தில்லி, 20 செப்டம்பர் 2009.
  13. ரூபா கங்கூலி சச்சின் கா சாம்னா இறுதி நாள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா , டிவிய பிஏஎல், டிஎன்என் 18 செப்டம்பர் 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_கங்குலி&oldid=3791471" இலிருந்து மீள்விக்கப்பட்டது