ரூபா சிங் (குதிரைப் பந்தய வீராங்கனை)
ரூபா சிங், ( Rupa Sing), இந்தியாவின் முதல் தொழில்முறை குதிரை ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார். இராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகக் கொண்ட இவரது தந்தை நர்பத் சிங் சென்னையில் பந்தையக் குதிரைகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது சகோதரரும் ரூபா சிங் போன்று குதிரைப் பந்தய ஓட்ட வீரர் ஆவர். ரூபா சிங் சிறு வயது முதல், இவரது தந்தை நர்பத் சிங்கை பயிற்சியாளராகக் கொண்டு குதிரையேற்றப் பயிற்சியை நிறைவு செய்தார். பின்னர் குதிரைப் பந்தய ஓட்டப் பயிற்சியாளரிம் பந்தயக் குதிரைகளை ஓட்டும் (Jockey)[1] திறைமைகளைக் கற்றார். தற்போது 33-வது வயது ஆகும் ரூபா சிங், இது வரை உலக நாடுகளில் நடைபெற்ற 720 குதிரை ஓட்டப் பந்தயங்களில் வென்ற இவர், 7 முறை சாம்பியன்சிப் கோப்பைகளையும் வென்றுள்ளார்.[2][3][4] அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற குதிரைப் பந்தைய ஓட்டப் போட்டியில் எம் ஏ எம் சிதம்பரம் கோப்பை வென்றுள்ளார். அதற்கு முன் 2010-இல் சென்னை குதிரை ஓட்டப் பந்தயப் போட்டியில் கோப்பையை வென்றார். பின்னர் 2014-இல் போலந்து நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான பந்தயக் குதிரை ஓட்டப் போட்டியில் முதலிடத்தில் வந்து வெற்றி வாகை சூடினார்.[5]