ரூப்பையா பண்டா
ரூப்பையா புவெசானி பண்டா (Rupiah Bwezani Banda, பிறப்பு: பெப்ரவரி 13, 1937) சாம்பியாவின் சனாதிபதி. இவர் அக்டோபர் 2006 இல் நாட்டின் உப-சனாதிபதியாக முன்னாள் சனாதிபதி லெவி முவனவாசாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1]. முவனவாசா ஜூன் 2008 இல் சுகவீனமுற்றபோது அவரது சனாதிபதி அதிகாரங்களைத் தனதாக்கி[2] பின்னர் முவனாசி இறந்த பின்னர் பதில் அதிபரானார். அக்டோபர் 2008 இல் நிகழ்ந்த சனாதிபதி தேர்தலில் ஆளும் "பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்" என்ற கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சனாதிபதி ஆனார்[3]. 2011, செப்டபரில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
ரூப்பையா பிவெசானி பண்டா Rupiah Bwezani Banda | |
---|---|
![]() | |
சாம்பியாவின் அதிபர் | |
பதவியில் ஜூன் 29 2008 – செப்டம்பர் 23, 2011 | |
முன்னவர் | லெவி முவனவாசா |
பின்வந்தவர் | மைக்கேல் சாட்டா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 பெப்ரவரி 1937 குவாண்டா, சிம்பாப்வே |
அரசியல் கட்சி | பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Mwanawasa warns challenger, names new cabinet"
- ↑ ""Zambian President Has Had a History of Hypertension, Says Information Minister"" இம் மூலத்தில் இருந்து 2008-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080707001704/http://voanews.com/english/Africa/2008-07-01-voa8.cfm.
- ↑ "Zambia: Banda sworn in, riots spread"