ரேகா சூர்யா

ரேகா சூர்யா (Rekha Surya-பிறப்பு 17 நவம்பர் 1959) ஓர் இந்துஸ்தானி பாரம்பரிய மெல்லிசைப் பாடகர் ஆவார்.[1][2][3]

Rekha Surya

இளமை தொகு

ரேகா சூர்யா இலக்னோவில் இந்தர் பிரகாஷ் சூர் மற்றும் சந்த் சூர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இந்தியப் பிரிவினையின் போது இத்தம்பதியினர் லாகூரிலிருந்து இலக்னோவிற்குக் குடிபெயர்ந்தனர்.[4]

கல்வி தொகு

சூர்யா தனது ஆரம்பப் பள்ளிப்படிப்பை இலக்னோவில் நிறைவு செய்தார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[5]

தொழில் தொகு

ரேகா சூர்யா, பேகம் அக்தர் மற்றும் கிரிஜா தேவியிடம் இசைப் பயிற்சி பெற்றார்.[6] ரேகா, பேகம் அக்தரின் கடைசி மாணவியாகவும் மாறினார்.[7] அக்தரின் மரணத்திற்குப் பிறகு, ரேகா சூர்யா கிரிஜா தேவியிடம் இசை கற்றுக் கொள்வதற்காக வாரணாசிக்குச் சென்றார். 1980களில் சங்கீத நாடக அகாதமியில் உதவித்தொகை பெற்றார். இங்கு குருவாக பணிபுரிந்த தேவி இவருக்குப் பயிற்சி அளித்தார். மூத்த சாரங்கி வீரர் பஷீர் கான் இவரது மற்றொரு குரு.[8]

சூர்யா 1994-இல் சங்கீத நாடக அகாதமியின் (எஸ்.என். ஏ) காப்பகத்திற்காகப் பதிவு செய்தார். ச. நா. அ. வெளியிட்ட "ஒரு குறிப்பிட்ட பாணியில் பாடியது" என்ற கையேட்டை இவர் எழுதியுள்ளார்.

இலங்கையின் ஆசிய இசை விழாவிலும் (1999), தஜிகிஸ்தானின் பன்னாட்டு பாலக் விழாவிலும் (2006) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சூர்யா இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[9]

பாரம்பரியம் தொகு

ரேகா சூர்யாவின் பாடும் பாணி சிருங்கார ரசத்தைச் சுற்றி வருகிறது. இது இவரை மாய கவிதைகளுடன் இணைக்கிறது.[10] இவர் தாத்ரா, கஜ்ரி, ஜூலா, ஹோரி, சைட்டி மற்றும் சூபியானா கலாம் ஆகியவற்றை தாத்ரா மற்றும் கசல் பாணியில் பாடுகிறார்.[11][12][13][14][15]

விருதுகள் தொகு

ரேகா சூர்யா "மாற்றத்திற்கான கலைஞர்கள்" பிரிவின் கீழ் 2012-13கான கரம்வீர் நோபல் பரிசு பெற்றவர்.[16]

மேற்கோள்கள் தொகு

  1. The Wire (2018-07-21), Urdu Wala Chashma, Episode 36: Begum Akhtar aur Rekha Surya - Ganga-Jamuni Tehzeeb, பார்க்கப்பட்ட நாள் 2018-07-22
  2. Rekha Surya enthralls music lovers in Hyderabad
  3. "Rekha Surya". rekhasurya.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
  4. "The Sensual Voice of Rekha Surya". http://www.thecitizen.in/index.php/en/newsdetail/index/9/2548/the-sensual-voice-of-rekha-surya. 
  5. The Sensual Voice of Rekha Surya
  6. "Begum Akhtar As A Student And A Teacher". https://www.ndtv.com/education/begum-akhtar-as-a-student-and-a-teacher-1759814. 
  7. CONTINUING THE LEGACY OF A LEGEND: REKHA SURYA
  8. "Tribuneindia... Interview". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  9. "Hindi Lovers host Rekha Surya Concert". India Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  10. Culture confluence
  11. "Ghazals win city's heart". The Telegraph. https://www.telegraphindia.com/1111208/jsp/odisha/story_14851986.jsp. 
  12. Chakravorty, Sohini. "Contemporising traditions" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/Contemporising-traditions/article13381936.ece. 
  13. "Evening of Sufi magic" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india/evening-of-sufi-magic/story-2wgkNce47b2QlNEIOP9W8O.html. 
  14. Rekha Surya interviewed by Ashok Vajpeyi
  15. webuser2. "Musical gala by Rekha Surya". www.keralawomen.gov.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  16. "Global Awards for Social Justice & Citizen Action by the people sector". karmaveerglobalawards.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_சூர்யா&oldid=3912966" இலிருந்து மீள்விக்கப்பட்டது