ரேகா தோஷித்
ரேகா மன்ஹர்லால் தோஷித் (Rekha Doshit) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.
இளமை & கல்வி
தொகுதோஷித் 1952ஆம் ஆண்டு திசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் குசராத்தின் ராஜ்கோட்டில் பிறந்தார்.[1] அகமதாபாத்தில் உள்ள சர் எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினையும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தினையும் பெற்றார்.
பணி
தொகுதோஷித் 1977-ல் வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1995-ல் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 21 சூன் 2010 அன்று, தோஷித் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[1] இதன் மூலம் பாட்னா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆனார் தோஷித்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Hon'ble The Chief Justice Miss Rekha Manharlal Doshit". Patna High Court. Archived from the original on 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014.