ரேசுமா வள்ளியப்பன்

ரேசுமா வள்ளியப்பன் (Reshma Valliappan) வால் ரேஷ் என்றும் அழைக்கப்படுகிறார் [1] (பிறப்பு 1980), மனநலம், இயலாமை, பாலியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு எதிரான ஒரு கலைஞர்-ஆர்வலர் ஆவார். இவர் பொது சேவை ஒலிபரப்பு அறக்கட்டளையின் "எ டிராப் ஆஃப் சன்சைன்" எனும் ஆவணத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[2] மனப்பித்துவினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த வித மருந்துகளும் இல்லாமல் சிகிச்ச்சை அளித்த ஒரு உண்மை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். தற்போது வரை இந்தக் கதை சர்ச்சையான ஒன்றாகவே இருந்து வருகிறது.[3] ஜான் ஃபோர்ப்ஸ் நாசின் எ பியீட்டிஃபுல் மைண்ட், யெட் அகைன் என்பதோடு ஒப்பிடப்படுகிறது.[4] யூத் கி ஆவாஸின் சிறப்புத் தொடரின் பரவலாக அறியப்பட்டவர்களில் ஒருவராகக் காணப்பட்டார்.

மனப்பித்து நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறியப்படுவதற்கு முன்பு அவரது வாழ்க்கையின் சுயசரிதை நூலானது, ஃபாலன், இசுட்டேண்டிங்:மை லைஃப் அஸ் எ சைசோபெர்னிஸ்ட்" உமன் அன்லிமிடெட் எனும் பதிப்பகத்தால் வெளியிடப்ட்டது. மனப்பித்து நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் களங்கம், மனித உரிமைகள் சிக்கல், மற்றும் மருந்துகள் இல்லாமல் எவ்வாறு வாழ்வது என்பதனைப் பற்றிய நூலாகும்.

ஊடகம் மற்றும் கலாச்சாரம்

தொகு

எ டிராப் ஆஃப் சன்சைன் ஆவணப்படத்திற்கு விருது கிடைத்தது. இது 59 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான சிறந்த உந்துதல்/ உத்வேகம்/ அறிவுறுத்தல் படமாக ரஜத் கமல் விருது (வெள்ளி தாமரை விருது) வென்றது, இது இந்தியாவின் திரைப்படங்களுக்கான பழமையான மற்றும் மதிப்புமிக்க விருதாகும். 'ஒரு இளம் பெண்ணின் தைரியமான பயணத்தின் கதையின் மூலம் மனப்பித்துவை மதிப்பிழக்கச் செய்வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. என்று கூறப்பட்டது.[5]

வருடாந்திர இந்திய ஆவண தயாரிப்பாளர் சங்கம் IDPA 2011 இல் இது அதிக எண்ணிக்கையிலான விருதுகளை வென்றது.[6] இந்த ஆவணப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தங்க விருது (தீம்), சிறந்த படத்திற்கான தங்க விருது (தொலைக்காட்சி அல்லாத புனைகதை), சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான தங்க விருதுகள் (புனைகதை அல்லாதவை), யாசிர் அப்பாசியின் சிறந்த ஒளிப்பதிவுவிற்காக விருது வழங்கப்பட்டது.

அங்கீகாரம் மற்றும் தொழில்

தொகு

செயற்பாடு

தொகு

ரேஷ்மா மைண்ட் ஆர்க்சின் இணை நிறுவனர் ஆவார் மற்றும் இதில் சமூக ஊடகங்களைப் (வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர்) பயன்படுத்தி மன ஆரோக்கியம் மற்றும் உளப் பிறழ்ச்சி உள்ளவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.

2012 ஆம் ஆண்டில் பாபு அறக்கட்டளையின் பார்கவி தாவரால் "மனநிலை சரியில்லாமல்" காணப்பட்ட ஒரு பெண்ணை விடுவிப்பதற்காக அரசு மனநல மருத்துவமனையில் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் ஒரு பிரச்சாரத்தை வழிநடத்த உதவினார். உறுதியான வழக்காடல் மற்றும் வழிகாட்டல் மற்றும் பிற ஆர்வலர்களின் உதவியுடன், அவர்கள் இரு வாரங்களில் பெண்ணை விடுவித்தனர், இது இந்தியாவில் இருநூறு ஆண்டுகளில் மனநல மருத்துவத்தின் இரண்டாவது வழக்காகப் பதிவானது.

அவர் அசோகா ஃபெல்லோவாக [7] 2014 மற்றும் 2014 ஆம் ஆண்டில் இங்க் ஃபெல்லோவாகத் தேர்வானார்.

வள்ளியப்பன் பாலியல் மற்றும் மனநோயின் பிரச்சினைகளை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார் குறிப்பாக அந்த நபருக்கு மனநோய் இருக்கும் சமயத்தில் .நோயியலின் கண்ணோட்டத்தில் அவை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதனையும் விளக்குகிறார்.[8]

சான்றுகள்

தொகு
  1. Chandy, Shalini. "Surviving Schizophrenia: An Artist's Account". Culturama Online. Culturama. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sanyal, Aparna. "A Drop of Sunshine". A Drop of Sunshine. PSBT. Archived from the original on 16 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
  3. Carey, Benedict. "Revisiting Schizophrenia: Are Drugs Always Needed?". National Empowerment Center. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
  4. Basheer, K.P.M. "A beautiful mind, yet again". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
  5. Sanyal, Aparna. "A Drop of Sunshine". Mixed Media Productions. PSBT. Archived from the original on 13 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 28 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "IDPA Awards for 2010". 29 October 2011. Indian Television. பார்க்கப்பட்ட நாள் 28 May 2014.
  7. "Ashoka - Everyone a changemaker". Ashoka - Everyone a Changemaker.
  8. Nair, Supriya (8 June 2012). "Willing and able". Livemint. http://www.livemint.com/Leisure/JngvFO2BzZd40r0VhDzzNP/Willing-and-able.html. பார்த்த நாள்: 28 May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேசுமா_வள்ளியப்பன்&oldid=3569958" இலிருந்து மீள்விக்கப்பட்டது